சிக்ஸ் அப்ஸ் கட்டுடல் விஷாலையும் கலங்கடித்துவிட்டது அவர் த்ரிஷாவை காதலிப்பதாக வந்த செய்தி. அதுபற்றி கேட்டால் வார்த்தைகளில் எரிமலை வெடிக்கிறது. அவரின் ஆவேச பேட்டியிலிருந்து...
நீங்கள் நடிகை ஒருவரை காதலிப்பதாக செய்தி வெளிவந்துள்ளதே...?
காதல்ங்கிறது புனிதமான விஷயம். நான் யாரை காதலிக்கிறேன் யாரை காதலிக்கலைங்கிற கேள்வியெல்லாம் தேவையில்லாதது. காதலிக்கும் போது நானே சொல்வேன்.
அப்படின்னா காதலிப்பது உண்மையா?
பெட்ரோல் விலை உயர்வு மாதிரி நாட்டில் பெரிய பிரச்சனைகள் நிறைய இருக்கு. இந்த மாதிரி நேரத்தில் நான் அந்த நடிகையை காதலிக்கிறேன், இந்த நடிகையை காதலிக்கிறேன்னு செய்தி போடுதெல்லாம் தேவையில்லாதது. மீண்டும் சொல்றேன். அப்படி ஏதாது நடந்தா நானே சொல்வேன்.
உங்க வளர்ச்சி பிடிக்காமல் சக நடிகர் ஒருவர்தான் இப்படி வதந்தி கிளப்பி விடுகிறார் என்பது உண்மையா?
அதுபற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. அப்படியே யாராவது வதந்தி பரப்பினாலும் எனக்கு கவலையில்லை. பின்னால் திரும்பிப் பார்க்கிற பழக்கம் எனக்கு கிடையாது. நானே இந்த மாதிரி வதந்தி கிளப்புறதா வேற சொல்றாங்க. அப்படி செய்யிறதா இருந்தால் செல்லமே படத்திலேயே செய்திருப்பேன்.
சத்யம் படம் பற்றி சொல்லுங்க...நான்கு வருஷத்துக்கு முன்னாடி டைரக்டர் ராஜசேகர் இந்த கதையை என்கிட்ட சொன்னார். மொத்தமா 23 கோடி இந்தப் படத்துக்காக செலவழிச்சிருக்கோம். படத்தோட ஸ்பெஷல் என்ன? சத்யம் என்னோட ஏழாவது படம். முந்தைய ஆறு படங்களோட உழைப்பை இந்தப் படத்துக்கு கொடுத்திருக்கேன். 1.75 கோடி செலவில் ஒரு பாடல் காட்சியை எடுத்திருக்கிறோம். பிரமாண்ட கார் சேஸிங்கும் படத்தில் இருக்கு. நயன்தாரா...?இந்தப் படத்துக்காக கடுமையா உழைச்சிருக்காங்க. ரொம்ப நல்லா ஒத்துழைப்பு கொடுத்திருக்காங்க. அடுத்து...? அடுத்த கட்டம் டைரக்சன்தான். நானே ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போறேன். இரட்டை வேடத்திலும் ஒரு படத்தில் நடிக்க கதை கேட்டிருக்கேன். சத்யம் எப்போது வெளிவருகிறது? ஆகஸ்ட் 14 படம் வெளியாகிறது. தெலுங்கில் சல்யூட் என்கிற பெயரில் ரிலீசாகுது. படத்தில் இசை பிரதானமாக இருக்கும். 84 இசைக் கலைஞர்கள் ஹாரிஸ் ஜெயராஜ் தலைமையில் சிம்பொனி ஸ்டைலில் ரீ-ரிக்கார்டிங் வாசித்துள்ளார். படத்துக்காக நிறைய உடற்பயிற்சிகள் செய்தீர்களா? செல்லமே செல்லமேங்கிற பாடலில் சிக்ஸ் அப்ஸ் உடற்கட்டுடன் ஆடியிருக்கேன். இதுக்காக ஆறு மாதம் உடற்பயிற்சி செய்தேன். நயன்தாரா உங்களுடன் நெருக்கமாக நடித்துள்ளாரே?
மற்ற ஹீரோயின்களை விட நயன்தாரா நெருக்கமாக நடிச்சிருக்கிறதா சொல்றாங்க. அப்படி நடிக்க யாரும் அவரை வற்புறுத்தவில்லை. காட்சிக்கு தேவைப்பட்டதால் அவரே அதை புரிந்துகொண்டு நடித்தார்.