நேபாளி படம் எப்படியோ, பரத்திற்குப் பாராட்டுக்கள் குவிகிறது. அந்தப் பரவசத்தில் இருந்தவர் பகிர்ந்துகொண்ட விடயங்கள் உங்களுக்காக...
நேபாளி எப்படிப் போகிறது?
ரொம்ப நல்லாப் போயிட்டிருக்கு. ரசிகர்கள் ரொம்பத் திருப்தியா ஃபீல் பண்றாங்க.
இனிமேல் ஆக்ஷன்தானா?
ஆக்ஷன் படம்தான் ஒரு நடிகருக்கு அடையாளத்தைத் தருது. பழனிதான் நான் நடித்த முதல் ஆக்ஷன் படம். நேபாளி, என்னாலும் இப்படி நடிக்க முடியும்னு நிரூபிச்சிருக்கு. அடுத்து சேவல், திருத்தணி, ஆறுமுகம் படங்களில் நடிக்கிறேன். அதேநேரம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு மாதிரியான கதையுடைய படங்களிலும் வருஷத்திற்கு ஒருமுறையாவது நடிக்கனும்.
நீங்கள் அதிகமா சம்பள் கேட்பதா ஒரு வதந்தி இருக்கே?
நான் சம்பளத்தில் குறியா இருக்கிறதா தப்பா சொல்றாங்க. ஆனா, அப்படி இல்லை. ஒரு படம் ஓடினால் நான் கேட்காமலே தயாரிப்பாளர்களாகவே சம்பளத்தை உயர்த்தித் தருகிறோர்கள். ஓடலைனா அவங்களே குறைச்சுடறாங்க. அதனால் என்னோட சம்பளத்தை நான் தீர்மானிக்கிறதில்லை.
நேபாளியில் வரும் படுக்கையறைக் காட்சிதான் இப்போது பரபரப்பா பேசப்படுது...?
மீரா ஜாஸ்மின் அற்புதமான நடிகை. அவங்ககூட நெருக்கமா நடிச்சது பற்றி எல்லோரும் கேட்கறாங்க. படத்தோட கதையைச் சொல்லும்போதே நெருக்கமான காட்சிகள் பற்றி மீராவிடம் இயக்குநர் சொல்லிவிட்டார். அதுக்கு அவங்களும் சம்மதம் தெரிவிச்சாங்க. அந்தக் காட்சிகள் எடுக்கும்போது அவங்க ரொம்ப ஈடுபாட்டோட நடிச்சாங்க.
நடிகர்களுக்குப் பட்டம் தேவையா?
தங்களோட அபிமான நடிகர்களுக்கு ரசிகர்கள் கொடுக்கிறது பட்டம். அதை வைச்சுக்கலைன்னா அவங்க மனசு கஷ்டப்படும். நமக்காக எவ்வளவோ கஷ்டப்படுற அவங்க சந்தோஷத்தை நாம ஏன் கெடுக்கனும்? எனக்குச் சின்னத்தளபதி பட்டத்தை ரசிகர்கள்தான் தந்தாங்க.
இந்தப் பட்டத்தை பிரகாஷ் ராஜ் வெள்ளித்திரையில் விமர்சித்திருக்கிறாரே?
அவர் பெரிய நடிகர். அவர் விமர்சிக்கிற அளவுக்கு எனக்குத் தகுதியில்லை.