யதார்த்தமாகப் பேசுகிறார் நயன்தாரா. நாளை என்பதைப் பற்றிக் கவலைப்படறதில்லை. எதிர்காலம் பற்றி யோசிக்கிறதில்லை. அதுபற்றி எந்த திட்டமும் எனக்கு கிடையாது. என் வாழக்கையில் எதுவுமே திட்டமிட்டு நடக்கிறதில்லை. வாழ்க்கை என்னை எங்கே அழைச்சிட்டுப் போகுதோ அப்படியே அதன் போக்கில் போவதுதான் என் பாலிஸி. வாழ்க்கை தரும் ஒவ்வொரு அனுபவத்தையும் அதன் போக்கில் ஏத்துக்குறது என் குணம் என்கிறார் நயன்தாரா.
நான் நேற்றைக்கு நடந்ததை கடந்து போனதை நினைச்சுக் கவலைப்படுறதோ எதிர்காலத்தில் நாளைக்கு என்ன நடக்கும்னு பயப்படறதோ கிடையாது. இன்றைக்கு என்ன செய்வோம். அதை எவ்வளவு ஈடுபாட்டோட டெடிகேஷனோட செய்றோம்கிறதைத்தான் நான் பார்க்கிறேன். இன்றைய பொழுதை சந்தோஷமா மனத்திருப்தியா எப்படி கழிச்சிருக்கோம்கிறதுதான் எனக்கு முக்கியம்.
வெகு பிராக்டிகலாகப் பேசுகிறார். பல கேள்விகளுக்கு கேட்கப் படாமலேயே விடை கிடைத்து விடுகிறது.
சந்திரமுகி, சிவாஜி என ரஜினியின் இரண்டு படங்களில் வாய்ப்பு, சரத்குமார், சூர்யா, விஜய், அஜீத், சிம்பு, விஷால், தனுஷ் என்று தமிழிலும் வெங்கடேஷ், நாகார்ஜுனா, ரவிதேஜா, பிரபாசு என்று தெலுங்கிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த நடித்துக் கொண்டிருக்கும் அனுபவம்... இப்போது அடைந்திருக்கும் உயரம் இவை நயன்தாரா எதிர்பார்த்தா?... என்றால்...
முன்னாடியே சொன்ன மாதிரி எனக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லை. திட்டங்களும் இல்லை. எல்லாம் தானா வந்தது என்று ரத்தினச் சுருக்கமாகப் பதில் வருகிறது.
சினிமாவுக்கு வரும்முன் சினிமா பற்றிய அபிப்ராயம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது?
எந்தப் ·பீல்டைப் பற்றியும் வெளியே இருந்து பாக்கிறது வேற... உள்ளே இன்வால்வ் ஆகி பார்க்கிறது வேற... சினிமாவுக்க வெளியே நின்று பார்க்கிறப்போ இந்தப் ·பீல்டு சுலபமா சொகுசா தெரியலாம். எனக்குக் கூட இதிலுள்ள கஷ்டங்கள் அப்போ தெரியலை. ·பீல்டுக்கு வந்து பின்னாடிதான் தெரியுது. இங்கே எல்லோருமே கஷ்டப்பட்டு உழைக்றிங்கன்னு... மெண்டலாவும் சரி பிசிக்கலாவும் சரி ரொம்ப§ கஷ்டப்படறாங்க... இதுல ஆர்ட்டிஸ்ட் டைரக்டர் கேமராமேன், டெக்னீஷியனிலிருந்து லைட்மேன் வரை கஷ்டப்படறாங்க. இது வெளியே இருக்கிறவங்களுக்குத் தெரியுறதில்லை.
சினிமாவில் மிகவும் தெளிவாகத் தெரிந்தது... இன்னமும் புரிபடாமலிருப்பது?
சில புரியலாம். சில புரியாமல் இருக்கலாம். ஆனா தினம்தோறும் கத்துக்கறேன். தெரியாத புரியாத விஷயங்களுக்காக கவலைப்பட்டு குழப்பிக்கறதில்லை. தேவைக்கு மட்டும் தெரிஞ்சுக்கிட்டு நம்ம வேலையைப் பார்த்துக்கிட்டுப் போவதுதான் என் கேரக்டர்.
ஆடம்பர வாழ்க்கை, அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் மீடியாவில் வெளிச்சம். ரசிகர் கூட்டத்தின் முற்றுகை என பிரைவெளி பறிபோனதாக உணரவில்லையா?
இந்த ·லைப் எல்லோருக்கும் அமையுறதில்லை. இந்த பாப்புலாரிட்டி வேணும்னா சிலதை இழக்க வேண்டியிருக்கும். இதுதான் இயற்கை. இந்த விஷயங்களையெல்லாம் சேர்த்துத்தான் இந்த பாப்புலாரிட்டியே கிடைக்குது.
பிரபலங்களைப் பற்றிய செய்திகளை பெரிதாக்குவது பற்றி....
பிரபலமானவங்களைப் பற்றித் தெரிஞ்சுக்க நினைக்கிறது யதார்த்தம். சகஜமான விஷயம். பப்ளிக் ·பிகர் ஆய்ட்டா அவங்களைப் பற்றி நியூஸ் வர்றதும், அதைப் படிக்க இன்ட்ரஸ்ட் காட்டுறதும் சகஜம். வேறு வழியில்லை. இதை சகஜமாகத்தான் எடுத்துக்கணும். ஒருத்தரைப் பற்றி அதிகமா பேசப்படுதுன்னாலே அவங்க பிரபலமாய்ட்டாங்கன்னுதான் அர்த்தம்.
நயன்தாராவிற்கு எந்த கதாபாத்திரம் பொருத்தமாக இருக்கும்?
எனக்கு என் தோற்றத்துக்கு எது சரியா இருக்கும்னு பார்த்துதான் சான்ஸ் கொடுப்பாங்க. ஒரு படம் முடிவாகிறபோது நாலு பேரை மைண்ட்ல வச்சி இதுல ஒருத்தரை செலக்ட் பண்றப்போ இதெல்லாம் பார்ப்பாங்க. எனக்கு எது சூட் ஆகும்னு பார்த்துத்தான் வாய்ப்பு தர்றாங்க. எல்லா கேரக்டர்சும் நானே பண்ண முடீயாது.
படத்தின் வெற்றி, தோல்வி பற்றிய கவலையோ பயமோ கதாநாயகிகளுக்கு இருக்கிறதா-
முன்பு கூட அவ்வளவாத் தெரியலை. ஆர்பமாக இருக்கும். படம் எப்படிப் போகுதுன்னு ஒரு சின்ன த்ரில்லிங் இருக்கும். பிறகு சுமாரான விஷயமா தெரிஞ்சுது. இப்போ பாப்புலரான பிறகு இது அதிகமாய்ட்டுது. படம் ரிலீசாகிற போது அதன் ரிசல்ட் தெரிஞ்சுக்கிற ஒரு டென்ஷன் இப்போ இருக்கத்தான் செய்யுது. அது பயமா கவலையான்னு சொல்லத் தெரியலை. நிச்சயம் ஒரு டென்ஷன் இருக்கு.
எந்த அடிப்படையில் படத்தை தேர்வு செய்கிறீர்கள்?
ஒரு படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி என்ன ரோல், யார் டைரக்டர், யார் ஹீரோ, என்ன பேனர், என்ன கதைன்னு பல விஷயங்கள் பார்ப்பேன். இதையெல்லாம் பார்த்துதான் முடிவு பண்ணுவேன்.
பில்லா படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்தது பற்றி கேட்டதற்கு,
அதை ரிஸ்க் என்று சொல்ல மாட்டேன். ஒரு ஆர்ட்டிஸ்ட் என்ற முறையில் தேவைப்பட்டதை செஞ்சேன் என்கிறார் அடக்கமாக. அதுமட்டுமல்ல பில்லா படமும் என் கேரக்டரும் ரொம்ப ரொம்ப வித்தியாசமா ஸ்டைலிஷா இருக்கும். அது வேற மாதிரியான படம். அடக்கியே வாசிக்கிறார்.