Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷா‌‌ல் ந‌ல்ல நடிக‌ர்: நய‌ன்தாரா!

Advertiesment
விஷா‌‌ல் ந‌ல்ல நடிக‌ர்: நய‌ன்தாரா!

Webdunia

, வியாழன், 8 நவம்பர் 2007 (12:10 IST)
"விஷால், நல்ல சக நடிகர். உடன் நடிப்பதற்கு சவுகரியமானவர்'' என்று நடிகை நயன்தாரா கூறினார்.

கேரளாவை சே‌ர்‌ந்தவ‌ர் பிரபல நடிகை நய‌ன்தாரா. இவ‌ர் த‌‌மி‌‌‌ழி‌லி‌ல் நடிக‌ர் சர‌த்குமாருட‌ன் ஐயா பட‌த்‌தி‌ல் அ‌றிமுக‌ம் ஆனா‌‌ர். ‌பி‌ன்ன‌ர் சூ‌ப்ப‌ர் ‌‌ஸ்டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த் ஜோடியாக ச‌ந்‌திரமு‌கி எ‌ன்ற பட‌த்‌தி‌ல் நடி‌த்தா‌ர். ‌இதையடு‌த்து அவ‌ர் ‌பிரபல நடிகையானா‌‌ர்.

நடிகர் சிலம்பரசனுடன் காத‌ல் ஏ‌ற்ப‌ட்டது நய‌ன்தாராவு‌க்கு. ‌பி‌ன்ன‌ர் இருவரு‌ம் கரு‌த்து வேறுபாடு காரணமாக ‌பி‌ரி‌ந்‌தன‌ர். இப்போது ஏராளமான தெலுங்கு படங்களில் நய‌ன்தாரா நடித்து வருகிறார். தமிழில், அ‌ஜீ‌த்துட‌ன் பில்லா', தனுசுட‌ன் `யாரடி நீ மோகினி', ‌விஷாலுட‌ன் `சத்யம்' ஆ‌கிய பட‌ங்க‌ளி‌ல் ஜோடியாக நடி‌த்து வரு‌கிறா‌ர்.

இது கு‌றி‌த்து நடிகை நய‌ன்தாரா கூறுகை‌யி‌ல், என் வாழ்க்கையில் எதுவுமே திட்டமிட்டு நடப்பதில்லை. வாழ்க்கை என்னை எங்கே அழைத்துக்கொண்டு போகிறதோ, அப்படியே அதன் போக்கில் போவதுதான் என் கொள்கை. நேற்று நடந்ததை, கடந்து போனதை நினைத்து கவலைப்படுவதோ, எதிர்காலத்தில், நாளைக்கு என்ன நடக்கும் என்று பயப்படுவதோ கிடையாது. இன்றைக்கு என்ன செய்கிறோம், அதை எவ்வளவு ஈடுபாடுடன் செய்கிறோம் என்பதைத்தான் பார்க்கிறேன். இன்றைய பொழுதை சந்தோஷமாக, மனதிருப்தியுடன் எப்படி கழித்திருக்கிறேன் என்பதுதான் எனக்கு முக்கியம்.

`பில்லா' படத்தில், நான் கவர்ச்சியாக நடித்து இருப்பது உண்மைதான். ஆனால், அது `ஸ்டைலிஷ்' ஆகத்தான் இருக்கும். ஆபாசமாக இருக்காது. தப்பாக இருக்காது.

`சத்யம்' படத்தில், நான் பத்திரிகை நிருபராக வருகிறேன். எல்லோருக்கும் என் கதாபாத்திரம் பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு பிடிக்கும். அந்த படத்துக்காக, ஒரே ஒரு பாடல் காட்சிதான் படமாகி இருக்கிறது. அதுவும் குழந்தைகளுடன்...

பில்லா படப்பிடிப்பின்போது அஜீத் எப்போது பார்த்தாலும் ஷாலினி பற்றியும், அவர் வயிற்றில் உள்ள குழந்தை பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். குழந்தை மீது அவருக்கு அவ்வளவு ஆசை. அஜீத், ரொம்ப நல்ல மனிதர். விஷால், நல்ல சக நடிகர். உடன் நடிப்பதற்கு சவுகரியமானவர்.

எப்போது திருமணம் எ‌ன்பதை தீர்மானிக்கவில்லை. எ‌ன்னை யாராவது ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணனை செய்தால் சந்தோஷமாக இருக்கும். எந்த கதாநாயகனுடனாவது ஜோடி சேர முடியவில்லையே என்ற ஆதங்கம் எதுவும் இல்லை. தெலுங்கு பட கதாநாயகர்கள் `வெரி நைஸ்.' என்னை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil