Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுலபமாக ஜெயிக்கவில்லை-விஷால்

Advertiesment
சுலபமாக ஜெயிக்கவில்லை-விஷால்

Webdunia

, புதன், 7 நவம்பர் 2007 (17:25 IST)
webdunia photoWD
ஆஜானுபாகுவான தோற்றம் அதிரடி ஆக்ஷன் என்றதும் நம் நினைவுக்கு வரும் பெயர் விஷால். குறுகிய காலத்தில் தனக்கென ஒரு கம்பீர நாற்காலி தேடிக் கொண்டு விட்டவர். ஆறே படங்களில் நட்சத்திர உயரத்தை எட்டித் தொட்டுவிட்டார். மலைக்கோட்டை வெற்றிக் கோட்டையான மகிழ்ச்சியும் திருப்தியும் விஷாலுக்குள் நிறைந்திருக்க, அடுத்த படமான சத்யம் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் அண்மையில் விஷாலைச் சந்தித்த போது...!

தமிழ் சினிமாவில் உங்களுக்கொரு இடம் கிடைத்துவிட்டது. இந்த இடம் நீங்கள் எதிர்பார்த்ததா? எதிர்பாராத ஒன்றா? இப்போது என்ன உணர்கிறீர்கள்?

ரொம்ப சந்தோஷமா இருக்கு. தமிழ் சினிமாவில் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிக்கிறதால பெருமையா இருக்கு. என் ல·ப்ல நான் எதிர்பார்த்து நடக்காததும் இருக்கு. எதிர்பாராதது நடந்ததும் இருக்கு. தமிழ்ப் படங்களில் நடிக்கணும் சக்சஸ் ஆகணும்னு கனவு இருந்திச்சு. அது இன்னைக்கு நிறைவேறி இருக்கு. இதுக்கு நானும் எங்கப்பாவும் ரொம்பவே கஷ்டப் பட்டிருக்கோம். இது சுலபமா வந்துடலை.

விசில். வசூல் எது உங்களுக்குப் பிடிக்கும்? நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டு பெறுவது, மசாலா படங்க்ளில் நடித்து வசூல் வெற்றி மட்டுமே கிடைப்பது எது பிடிக்கும்?

ஒண்ணு சொல்லட்டுமா,, விசிலுக்கும் வசூலுக்கும் வகு தூரமில்லை. ஏன்னா நல்ல மாதிரி ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படம் இருந்திச்சின்னா விசில் சத்தமும் வரும், வசூல் சத்தமும் வரும். கைதட்டல் ஓசையில் தான் கல்லாப் பெட்டியும் நிறையும். இது பொதுவான லாஜிக்தான். வெறும் பாராட்டு மட்டும்ங்கிறது, நீங்க சொல்றது ஆர்ட் பிலிம் மாதிரி சீரியஸ் படங்கள். இப்போ எனக்குள்ள பெரிய அக்கறை நம்மை நம்பி முதலீடு பணம் போட்ட முதலாளியை காப்பாற்றியாகணும். இப்போதைக்கு என் கவலையெல்லாம் என் படம் ஓடணும். தயாரிப்பாளர் சந்தோஷப் படணும். வேற பக்கமெல்லாம் என் சிந்தனை போவதில்லை. மத்ததையெல்லாம் பிறகு பார்ப்போம்.

மலைக்கோட்டை வெற்றி உங்களுக்கு சொல்வது என்ன?

எந்த வேலையையும் சின்சியரா டெடிகெஷனோட செஞ்சா வெற்றி நிச்சயம். எந்த தயக்கமும் காம்ப்ரமைசும் இல்லாம உழைக்கணும். அதுக்குப் பலன் உண்டு. அதுதான மலைக்கோட்டையில் நடந்திச்சு. எல்லாருமே கடுமையா உழைச்சோம். டைரக்டர் பூபதி பாண்டியன் கடுமையான உழைப்பாளி. அவருக்கு காமெடி நல்லா வரும். எனக்கு ஆக்ஷனில் ஆர்வம். ரெண்டும் இதில் கூட்டணி. அதுமட்டுமல்ல அதுல பங்கு பெற்ற எல்லாருக்குமே ரீசன்டா ஹிட் கொடுத்த சென்டிமெண்ட்டும் இருந்திச்சி. எல்லாம் ஒண்ணா சேர்ந்திச்சு. சுருக்கமா சொன்னா இன்வால்வ்மெண்ட் சப்போர்ட்டும் சென்டிமெண்ட் சப்போர்ட்டும் மலைக்கோட்டைக்கு கிடைச்சுது.

மலைக்கோட்டைக்கு முன்னரே தொடங்கிய சத்யம் ஏன் தாமதம் ஆனது?

webdunia
webdunia photoWD
சத்யம் நல்ல சப்ஜெக்ட்தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ரொம்ப நல்லா வரம்னுதான் தாமதமாச்சுன்னு வச்சிக்குங்களேண். இடையில் மலைக்கோட்டைஹிட்டாகி அந்த சந்தோஷமும் சேரணும்னு கூட இருந்திருக்கலாம். இதற்காக சில மாதங்கள் காத்திருந்து நேரம் செலவழிச்சோம். இப்ப மொத்த டீமின் பாமே மாறியாச்சு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறது உறுதியான பிறகு எல்லாம் மாறியாச்சு. படத்தோட பலமும் கூடியாச்சு. முன்னாடி எனக்கு அவர் செல்லமே படத்துக்கு மியூசிக். எங்க காம்பினேஷன்ல இது ரெண்டாவது படம். ஹாரிஸ் சாருக்கு இது 25வது படம். எனக்கு ஏழாவது படம். முன்னாடி த்ரிஷா நடிக்கிறதா இருந்திச்சு. இப்போ நடிக்கிறது நயன்தாரா. இப்படி பல மாற்றங்கள். இப்போ படத்தோட பலம் கூடியிருக்கு. கன்னட நடிகர் டைரக்டர் உபேந்திரா அருமையான கேரக்டரில் நடிக்கிறார். அது பெரிய ப்ளஸ். இப்படி நிறைய விஷயங்கள். டைரக்ஷன் ஏ. ராஜசேகர்ங்கிற திறமையான இளைஞர்.

கனல் கண்ணன் உங்களுக்கு அதிரடி ஆக்ஷன் சண்டைக் காட்சிகள் அமைத்தவர். அவருக்கும் உங்களுக்கும் பிரச்சினையா?

இந்தப் படத்தில் அவர் ஒர்க் பண்ணலை. செல்வம்ங்கிறவரை அறிமுகப்படுத்துறோம். கனல் கண்ணனும் நானும் நல்ல நண்பர்கள்தான். இன்னைக்கும் க்ளோஸ் ப்ரண்ட்ஸ். ஒரு விஷயத்தைப் பேசறப்போ அதை இன்வால்வ்மெண்ட்னு சிலர் எடுத்துப்பாங்க. இன்டர்பியரன்ஸ்னு சிலர் எடுத்துப்பாங்க. ரெண்டுக்கும் கொஞ்சம்தான் இடைவெளி இருக்கும். எனக்கும் அவருக்கும் கருத்துப் பரிமாறும்போது முரண்பாடு வரும். பிறகு சரியாகிவிடும். இப்போ ஒரு சேஞ்ச் இருக்கணும்னு வித்தியாசத்துக்குன்னு வேற மாஸ்டரை போட்டிருக்கோம். இதில் கனல் கண்ணன் சம்மதமும் இருக்கு. பேசி முடிவு பண்ணின விஷயம்தான் இது.

சத்யம் படத்தின் கதை கேரக்டர் பற்றிச் சொல்ல முடியுமா?

இதில் நான் ஏ.சி. அதாவது அஸிஸ்டென்ட் கமினர் ·ப் போலிஸ். முதன் முதலில் காக்கிச் சட்டை போடற வாய்ப்பு. நான் இதில் சில விஷயஙகளில் இம்ப்ரஸ் ஆகியிருக்கேன், அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும், போலிஸ் கேரக்டர்னா வழக்கமான போலிஸா இருக்க மாட்டேன். எனக்குள் மூணு விதமான மூடு இருக்கும். ஒண்ணு போலிஸ் கமிஷ்னர். மத்த ரெண்டும் என்னங்கிறதுதான் படத்தோடு சஸ்பென்ஸ். நயன்தாரா படத்தோட ஹீரோயின் மட்டுமல்ல காமெடியன் இல்லாத குறையைக் கூட போக்குகிற மாதிரி கலகலப்பான கேரக்டர் அவங்களுக்கு.

புரட்சித் தளபதி பட்டம் தொடருமா?

இனி அது தொடரும். இது எனக்கு அன்பால கொடுக்கப்பட்டது. யாருக்கும் போட்டியா இல்லை. நான் என்னைக்கும் யாருக்கும் போட்டியில்லை.

வெற்றிகளுக்குப் பிறகு அண்ணன் தயாரிப்பில் நடிப்பது பற்றி....

அண்ணன் பற்றி முக்கியமான விஷயம் அவரது கல்யாணம் மார்ச் 9ல் நடைபெற இருக்கு. மார்ச் 8ல் வரவேற்பு. அண்ணன் விக்ரம் கிருஷ்ணா எனக்கு அண்ணன் மட்டுமல்ல பெஸ்ட் பிரண்டும் கூட. இது எங்க குடும்பப் படம்னு எந்த விதமான சிக்கனமும் செய்யாமல் நல்லா செலவு பண்றார். சத்யம் கதை கேட்டப்போ இதை யாரும் செஞ்சு அது ஹிட்டாகி நாம் வருத்தப் படக் கூடாதேன்னு கமிட் பண்ணிட்டு காத்திருந்தோம். இதுவரை 40 நாள் ஷ¤ ட்டிங் போயிருக்கு. ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தோட்டாதரணியின் மூணு செட் போட்டாங்க. 1.75 கோடி செலவாச்சு. பாடல் காட்சி எடுத்தோம். அந்த அளவுக்கு செலவு பண்றாங்க. ஹிட் கொடுத்த பிறகு நடிக்கிறதுல ரிஸ்க் எடுக்கிறது கூட சந்தோஷமா இருக்கு. அதனால பெரிசா செலவழிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil