Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகனுக்கு சமூகப் பொறுப்பு தேவையா? -விக்ரம்

Advertiesment
நடிகனுக்கு சமூகப் பொறுப்பு தேவையா? -விக்ரம்

Webdunia

, செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (12:06 IST)
கமலுக்குப் பிறகு நடிப்பு என்பதற்கு புதிய பொழிப்புரை எழுதிவருபவர் விக்ரம். இவர் கேமரா முன் வெறும் நடிப்பை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்த சாதாரண நடிகர்களின் பட்டியலில் சேர்த்திட முடியாதவர். ஏனெனில் இவர் ஒரு போராளி. ஃபீனிக்ஸ் பறவையின் ஒப்பீடு இவருக்கு மட்டுமே பொருந்தும். போராடி வெற்றி பெற்று இன்று புகழேணியில் உயரே நிற்கிறார். தான் நடிப்பதை `படம்' என்று எண்ணாமல் 'தவம்' என்று கருதுவதுதான் விக்ரமின் 'பலம்'. இவரது சமீபத்திய தவம் 'பீமா' அது வரமாகக் கனிந்து வருகிறது இப்போது. இத்தருணத்தில் அவருடன் ஒரு சந்திப்பு...

அப்படியென்ன 'பீமா'வில் பிரமாதம்?

webdunia photoWD
நிஜமாவே என்னை இம்ப்ரஸ் செஞ்ச கதை 'பீமா'. ஒரு மனுஷன் ரவுடியிசத்தை விரும்பலாமா... வேண்டாமா... விரும்புற ஒருத்தனை பற்றிய கதை தான் பீமா. ரவுடியிசம் தப்புதானே... அதன் விளைவையும் சொல்லுது கதை. நிழல் உலகத்துல - அண்டர் வேர்ல்டுல நடக்கிறமாதிரியான கதை. தாதா உலகம் அது சாதா உலகமல்ல. பல சுவாரஸ்யங்கள் கொட்டிக்கிடக்கு. தாதா உலகத்து ஒரு பக்க சுவாரஸ்ய சம்பவங்களை ஒருத்தன் விரும்புறான். உடல்ரீதியா பலசாலியா இருக்கிறதால அவனுக்கு இந்த ஆசை வருது. இதனால அவனோட வாழ்க்கைல என்னென்ன மாற்றங்கள் நடக்குதுன்னும் அவன் என்ன மாதிரி ஆகிறான்னும் சொல்ற கதைதான் 'பீமா'.

ஆக இதுவும் ஒரு அடிதடி - தாதா சம்பந்தப்பட்ட கதை தானா?

அப்படிச் சுலபமா ஒரு வட்டத்துக்குள் அடக்கிட முடியாது இதை. ரொம்ப சாதாரணமா தப்புக்கணக்குப் போட்டுடாதீங்க. 'பீமா'வுக்குள் பல சுவாரஸ்யங்கள் கொட்டிக்கிடக்கு. லிங்குசாமிக்கும் எனக்கும் பல விஷயங்கள் ஒத்துப்போகும். ஒரு விஷயம் மிகச் சரியா சொல்லப்படணும்... ஒரு சீன் ரொம்ப நல்லா எடுக்கப்படணும்கிறதுல அதன் அடியாழம் வரை யோசிக்கிறவங்க நாங்க. இந்த பர்பக்‌ஷன் சரியா அமையணும்னா நோ காம்ப்ரமைஸ். இதுதான் எங்கள் பாலிசி. பரவாயில்லை, எடுத்தது போதும், இதை வச்சிப் பாத்துக்கலாம், அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம், சரிப் பண்ணி போட்டுக்கலாம். இதெல்லாம் எங்க அகராதியில கிடையாது. 'பீமா' எங்களோட ரெண்டு வருஷ தவம்னே சொல்வோம்.


நீங்கள் தான் நாயகன். இருந்தாலும் உடன் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அக்கரையோ பயமோ உங்களுக்கு வருவதுண்டா?

அந்தக் காலத்தில் சிவாஜி சார் கூட தன்னுடன் நடிப்பவர்களுக்கும் நல்ல நடிப்பு வாய்ப்பு அமையணும்னு விரும்புவாராம். தான் மட்டும் பெயரெடுத்தால் போதும்னு நினைக்கமாட்டாராம். கோ ஆர்ட்டிஸ்ட் பர்ஃபாமென்ஸும் தன் நடிப்பு பளிச்சிட வேண்டும்னு நினைப்பாராம். அதுபோல் தான் கமல்சாரும். தன் வில்லன் நடிகரைக் கூட உயர்த்திவிடும் குணமுள்ளவர். நானும் இந்த விஷயத்தில் அவர்களைப் பின்பற்றும் நடிகன்தான். என் படத்தில் நடிக்கும் நாயகிகள் பொம்மை போல வந்து போவதில் விருப்பமில்லாதவன். சில ஹீரோ ஓரியண்டட் படங்கள் இதுமாதிரி அமையாமல் போயிருக்கலாம். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் ஹீரோயின் கேரக்டருக்கும் அழுத்தம் இருக்கும்படி விரும்பறேன். வில்லன் கேரக்டர்கூட அப்படித்தான். 'தில்'லில் ஆசிஷ் விதயார்த்தி கலக்குவாரில்லையா... 'சாமி'யில் கோட்டா சீனிவாசராவ் பின்னுவாரில்லையா... 'மஜா'வில் பசுபதி ஆக்கிரமிப்பார் இல்லையா... அப்படி அவர்களும் பெயரெடுப்பதில் எனக்கும் சந்தோஷ சம்மதம்தான். இப்போ 'பீமா'வில் பிரகாஷ்ராஜ், ரகுவரன், ஆசிஷ்வித்யார்த்தி மூன்று பேருமே இருக்காங்க. போட்டி பலமா இருக்கு. அதனால எனக்கும் சேலஞ்சிங்கா இருக்கும். இது ஒருவகை சவால் - சுவாரஸ்யம் - சுகமான அனுபவமும் கூடன்னு சொல்வேன். ஏன் 'பீமா'வுல த்ரிஷா கூட சும்மா வந்து போற மாதிரி இல்லை. அவங்களுக்கும் நல்லா நடிக்க ஸ்கோப் கிடைச்சிருக்கு. நான் ஹீரோன்னு சொன்னாலும் உடன் நடிக்கிற கோ ஆர்ட்டிஸ்ட் கிட்டேயிருந்தும் கத்துக்கறேன். புதுப்புது விஷயம் தெரிஞ்சுக்கறேன்.

நடிப்பு தவிர வேறு எதில் ஈடுபடுவதில் தனியார்வம் உண்டு?

நான் நடிப்புக்காக கேரக்டர் வாட்ச் பண்றது உண்டு. ஏன் கேரக்டர் ஸ்டடின்னு கூட சொல்லலாம். அதில் ஒரு தனியான சந்தோஷம். ஒவ்வொரு கேரக்டரும் எப்படி எப்படி இருக்கும், என்னமாதிரி பர்ஃபாம் பண்ணணும்னு உற்றுப் பார்த்தாலே அது ஒரு மகா சுவாரஸ்யமா இருக்கும். இதுவே ஒரு கடல் மாதிரியான விஷயம். டெக்னிக்கல் விஷயங்களில் சினிமாவில் ஆர்வம் காட்டுவேன். டைரக்‌ஷன், கேமரா... இதுபற்றி பார்க்க கேட்க தெரிஞ்சுக்க எனக்கு ஆர்வம் உண்டு. குறிப்பா கேமரா மேல கொள்ளை ஆசை. கையில் கேமராவை எடுத்துட்டு கண்டதையெல்லாம் சுட்டுத்தள்ள எனக்கு அலாதி இன்பம். டைம் கிடைச்சா அதைச் செய்ய மறக்குறதில்லே.

ஒரு நடிகருக்கு சமூகப் பொறுப்பு எந்த அளவுக்கு அவசியம்?

ஒரு சாதாரண மனிதனை விட ஒரு நடிகனை எல்லாருக்கும் பிடிக்குது. அவன் மீது மக்களுக்கு ஈர்ப்பு இருக்குது. அதனால்தான் அவனைப் பற்றி நல்லதோ கெட்டதோ எந்தச் செய்தி வந்தாலும் பிரபலமாய்டுது. நாங்க பாப்புலர் ஆனதால சுதந்திரம் பறிபோனாலும் பல விருப்பங்களை ஆசைகளை தியாகம் செய்ய வேண்டியிருக்கும். இதுதான் பாப்புலாரிடிக்கு நாங்க கொடுக்கிற விலை. பிடிச்சிருக்கிறதால் நம்பிக்கை வைக்கிறாங்க. நம்மை ரோல்மாடலா நினைக்கிறாங்க. அதனால அவங்க விருப்பம் - நம்பிக்கைக்கு எதிரா இருக்க முடியாது. பொறுப்புள்ளவனா சமூகப் பொறுப்பு சமுதாய அமைதி விரும்புகிறவனா இருந்தாக வேண்டும். நடிக்கிற கேரக்டர்ஸ்ல கூட நெகடிவ் கருத்து வந்துவிட்டால் சில நேரம் ஏத்துக்கறதில்லை. அது கேரக்டரின் கருத்தா நினைக்காம நடிகரின் கருத்தா நினைப்பது ஒரு சங்கடம். இந்த எதிர்பார்ப்புகளைக் கடந்து தனியான நடிகனா வரவே எனக்கு விருப்பம்.

நடிப்பு - நடிகர், அடுத்த இலக்கு?

நடிப்புங்கிறதோட அடியாழம் எது வரைக்கும் போகும்? அதன் அகலம் என்ன...! விடை தெரியாத கேள்வி இது. நாளுக்கு நாள் மனிதனும் அவன் நடை உடைகளும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும் மாறிக்கிட்டே போகுது. நடிப்பும் அப்படித்தான். நடிப்பதே தெரியாமல்.. யதார்த்தம்... அதையும் தாண்டி போய்க்கிட்டே இருக்கு. நடிப்புல அடைய வேண்டியதே நிறைய இருக்கே.

Share this Story:

Follow Webdunia tamil