Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொம்மரிலு ஒரு மேஜிக் படம் - இயக்குநர் `ஜெயம்' ராஜா

Advertiesment
பொம்மரிலு ஒரு மேஜிக் படம் - இயக்குநர் `ஜெயம்' ராஜா

Webdunia

, வியாழன், 19 ஜூலை 2007 (11:40 IST)
ஆந்திராவில் சக்கைப் போடு போட்ட தெலுங்குப் படம் பொம்மரிலு. சித்தார்த் ஜெனிலியா, பிரகாஷ்ராஜ் தெலுங்கில் நடித்திருக்கிறார்கள். அதே படம் தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம் என்கிற பெயரில் ரீமேக் ஆகிறது. நடிப்பவர்களில் சித்தார்த் இடத்தில் ஜெயம்ரவி என்பது மட்டுமே மாற்றம். இயக்குபவர் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா. இப்படத்தின் தொடக்கவிழாவில் இயக்குநர் ராஜாவுடன் பேசியபோது...

ரீமேக் பட இயக்குநர் என்கிற முத்திரை பலமா? பலவீனமா?

ரீமேக் என்று சாதாரணமாகச் சொல்வது சுலபம். அதிலுள்ள கஷ்டம் யாருக்கும் தெரியாது. ஒரு மொழியில் வெற்றி பெற்ற விஷயம், கதை இவற்றை இன்னொரு மொழிக்கு மாற்றுவதும் அதே அளவுக்கு ரசிக்க வைப்பதும் கஷ்டம். வெளியிலிருந்து பார்க்கும்போது இது ஈஸியானது போலத் தோன்றும். ரீமேக் செய்ய இருக்கிற மொழிக்கு கதையை மாற்றுவது என்னைக் கேட்டால் கஷ்டம். சவாலான ஒன்று என்பேன். ரீமேக்கிலும் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். முக்கியமன கதைக்களம் மாறாமல் அந்த உயிரோட்டத்தைப் பாதிக்காத வகையில் இந்த மாற்றங்கள் இரக்க வேண்டும். என்னை ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் என்பதில் வருத்தமில்லை. அந்தவகையிலாவது எப்படி பெயரெடுப்பது என்பதில் என் கவனமும் உழைப்பும் இருக்கும். இந்த வட்டத்துக்குள் நம் திறமையை எப்படிக் காட்டுவது என்பதில்தான் என் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதிலிருந்து மீண்டு வர விருப்பமில்லையா?

நான் என் சொந்தக் கதையிலும்படம் இயக்குவேன். ரீமேக் படங்களில் நான் தேடிப் போனதும் உண்டு. என்னைத் தேடி வந்ததும் உண்டு. இந்த சந்தோஷ் சுப்ரமண்யம் என்னைத் தேடி வந்த வாய்ப்பு. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம் பொம்மரிலு. இதைத் தமிழில் யார் யாரோ நடிப்பதாக யார் hயரோ இயக்குவதhக பேசப்பட்டது. ஆனால் என் மேல் நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். தென்காசிப்பட்டணம் மலையாளப்படத்தை தமிழிலும் ரீமேக் செய்தார்கள். அதே இயக்குநர்கள்தான் ஆனாலும் மலையாளம் போல தமிழில் வெற்றி பெறவில்லை. அதே படத்தை அர்ஜூன், ஜெகபதிபாபுவை வைத்து தெலுங்கில் நான் இயக்கினேன். பெரிய வெற்றி பெற்றது. இப்போது சொல்லுங்கள். ரீமேக் அவ்வளவு சாதாரண விஷயமா? எனக்கு வரும் வாய்ப்புகளில் நிறைய ரீமேக் படங்களாக வருகின்றன. நேரடிக் கதைகளையும் இயக்குnன். ரீமேக் வட்டம் என்பது நான் விரும்பி ஏற்றுக் கொண்டதுதான். இதிலிருந்துநான் எப்போது விரும்பினாலும் வெளியே வர முடியும்.

அதேபோல, அப்பா, தம்பி கூட்டணியுடன் தொடர்கிறதே..?

ஆரம்பத்தில் அது எனக்குப் பாதுகாப்பாக இருந்தது. சுலபமாக இருந்தது. குடும்பத் தயாரிப்புகளில் மட்டும்தான் என்கின்ற பெயரை மாற்ற வேண்டும் என்று நானும், ரவியும் முடிவு செய்தோம். அதன் விளைவாகத்தான் வெளிப் படங்களில் நானும், ரவியும் தனித்தனியே படங்கள் பண்ணினோம். இதற்கும் காரணம் எங்கள் அப்பாதான். இப்போது உருவாகும் `பொம்மரிலு' வெளி கம்பெனிதான். அப்பாவுக்கம் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பொம்மரிலுவின் வெற்றிச் சூத்திரத்தை எப்படி தமிழுக்கு மாற்றப் போகிறீர்கள்?

`பொம்மரிலு' இயக்குநர் பாஸ்கர் என் நண்பன். அந்தப் படத்தை நான்தான் க்ளாப் அடித்துத் துவக்கி வைத்தேன். அந்தப் படம் இந்த அளவிற்கு வெற்றி பெறும் என்று யாருமே நினைக்கவில்லை. படத்தின் வெற்றி விழாவில் பாஸ்கரை தெலுங்கில் வெற்றி பெற்ற 140 இயக்குநர்களின் முன்னலையில் பாராட்டி சிறந்த புதுமக இயக்குநராகத் தேர்ந்தெடுத்துக் கொளவித்தார்கள். ஒரே படத்தில் அவ்வளவு பெருமை கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தை இயக்க எனக்கு வந்துள்ள வாய்ப்பு என் அதிர்ஷ்டம். ஆந்திராவில் எல்லாரையும் கட்டிப்போட்ட அந்த மேஜிக் எல்லாரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். அந்த மேஜிக்கை பார்த்து காப்பியடித்துவிட முடியாது. மேஜிக் செய்பவனாக மாறும்படி கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மேஜிக் எடுபடும், ஜெயிக்கும். அதற்குத்தான் நான் கடுமையாக உழைத்து வருகிறேன். படம் - கதை ஜாலியாகத்தான் போகும். ஆனால் அந்த உழைப்பை - வலியை யாரும் எடை போட்டுவிட முடியாது.

தமிழக்காக என்ன சேர்க்க இருக்கிறீர்கள்?

அடிப்படையான விஷயத்தை தொடாமல் கதையை அப்படியே சொல்வோம். காமடியை கொஞ்சம் அதிகப்படுத்துவோம். மொத்தத்தில் வெற்றி என்பதை குறிவைத்தே எங்கள் பயணம் இருக்கும். சந்தோஷாக ரவி, சுப்பிரமணியாக பிரகாஷ் ராஜ், தெலுங்கில் நடித்த ஜெனிலியா மற்றும் மனோபாலா, சந்தானம், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தியில் பல விளம்பரப் படங்கள் செய்துவந்த பி.எஸ். வினோத் ஒளிப்பதிவாளர். தெலுங்கில் இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத்தான் தமிழிலும் இசை. பாடல்கள் முத்துக்குமா, யுகபாரதி, பா. விஜய். `பொம்மரிலு' மந்திரத்தைத் தமிழில் கொண்டுவர என் அதிகபட்ச உழைப்பைத் தரத் தயாராக உள்ளேன்.

ஒரு பர்சனல் கேள்வி, ராஜா, ரவி என்கிற நீங்கள் இருவருமே நடிகர்கள் போல இருக்கிறீர்கள். யார் இயக்குநர் யார் நடிகர் என்கிற பாதை எப்போது தீர்மானமானது?

ரவி என்னைவிட ஆறு வயது சின்னவன். நான் எப்போதும் அப்பா கூடவே இருப்பேன். அவரது எடிட்டிங்கில் வேடிக்கை பார்ப்பேன். சிறு வயதிலேயே டெக்னீசியனாகவே என் ஆர்வம் இருந்தது. தம்பி ரவி சின்ன வயதிலேயே பரதநாட்டியம் கற்றுக் கொண்டான். ஒன்பது வயதில் அரங்கேற்றம். இப்படி அவன் பாதை ஒரு கலைஞனாக சிறு வயதிலேயே அடையாளம் காட்டப்பட்டுவிட்டது. இருவருக்கும் பாதை வெவ்வேறாக இருந்தாலும் நாங்கள் இருவரும் பயணம் செய்வது சினிமாவில்தான்.

Share this Story:

Follow Webdunia tamil