நேரடிப் படங்களும் இயககுவேன்! - பிரபுதேவா
"
போக்கிரி" 150வது நாளைத தாண்டி ஒடிக் கொணடு இருக்கிறது. அதன் இயக்குநர் பிரபுதேவா உற்சாகத்தில் இருக்கிறார். இப்போது தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து "ஷங்கர் தாதா ஜிந்தாபாத்" இயக்க வருகிறார். "போக்கிரி"யை இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்க இருக்கிறார். இபபடி பலமொழிகளில் படங்களை இயக்கும் இயக்குநராகி விட்டார். தன் பணிகளின் பரபரப்பை சற்று விலக்கி வைத்துவிட்டு நம்முடன் பேசினார்.படம் இயக்கும் ஆசை-ஆர்வம் உங்களுக்குள் எப்போது வந்தது?ஒரு நான்கைந்து ஆண்டுகளாகவே இது எனக்குள் இருந்திருக்கிறது. பல பேர் நம்பிக்கையும் தயாரிப்பாளர் ஊக்கமும் கொடுத்த போது அது நிறைவேறி இருக்கிறது. படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை ரொம்ப நாளாக இருந்திருக்க வேண்டும். சமீப காலமாக அதிகரித்து என்னை டைரக்டராக்கி விட்டது.ரீமேக் படங்களாகவே இயக்குகிறீர்கள்.. ஏன்?ஒரு மொழியில் வெற்றி பெற்ற படங்களை இன்னொரு மொழியில் செய்வது ஒன்றும் புதிதல்ல. நேரடியாக ஒரு படத்தை இயக்க எனக்கும் ஆசை இருக்கிறது. தமிழில் என் அடுத்த படம் அப்படிப்பட்டதாக இருக்கும்."
ஆதி" தோல்விக்குப் பிறகு விஜய்யை வைத்து "போக்கிரி" இயக்கும் போது தயக்கம் இருந்ததா?எனக்கு தமிழில் முதல் படம் என்கிற பயம் இருந்தது உண்மை. விஜய் ஏற்கெனவே பல வெற்றிகளைக் கொடுத்து நிரூபித்தவர். நாம் அந்த அளவுக்கு செய்ய வேண்டுமே என்கிற பயம் தான் எனக்கு இருந்தது. மற்றபடி எனக்கு எந்தக் கவலையும் இருந்ததில்லை. "போக்கிரி"யில் வெற்றியில் எங்கள் இருவருக்குமே சந்தோஷம் தான்.நீங்கள் பல நட்சத்திரங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்துள்ளீர்கள். உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?நிறைய பேர் இருக்கிறார்கள். மாதுரி தீட்ஷித், நக்மா, ரோஜா, சிம்ரன், த்ரிஷா. இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது.நடிகர்களில் நன்றாக ஆடக் கூடியவர் யார்?நான் யாரையாவது சொல்ல என்னை வம்பில் மாட்டிவிட உத்தேசமா? எல்லாருமே நன்றாக நடனம் ஆடக் கூடியவர்கள் தான். இன்று டான்சுக்கு நல்ல கிரேஸ் இருப்பது எல்லாருக்குமே தெரிந்திருப்பதால் எல்லாருமே நன்றாக ஆடுகிறார்கள்.தமிழ், தெலுங்கு, இந்தி எனறு மூன்று மொழிகளிலும் இயக்குகிறீர்கள். எந்த மொழி வசதியாக-இலகுவாக இருக்கிறது?டைரக்ஷன் வேலை என்பது கஷ்டமானதுதான். .அதனால் வேலை எல்லா மொழியிலும் கஷ்டம் தான். நான் எல்லா மொழியிலும் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறேன். நண்பர்கள் நிறைய உண்டு. தெலுங்கு, இந்தி, தமிழ் எல்லாமே மொழிப் பிரச்சினை இல்லை. ஏனென்றால் தெரிந்தவர்கள் யூனிட். அதனால் எல்லாமே சுலபமாக வசதியாக இருக்கிறது.பிற டான்ஸ் மாஸ்டர்களை உங்கள் படங்களில் பணியாற்ற வைக்கும் போது திருத்தங்கள் சொல்வதுண்டா?அவர்களை சுதந்திரமாக இயங்க விடுவது தான் அவர்களுக்கு நான் செய்யும் உதவி. "போக்கிரி"யில் ஐந்து மாஸ்டர்ஸ். அவர்கள் பாடல்களை படமாக்கிய போது செட்டுக்கு கூட போகாமல் எடிட்டிங்கில் இருந்தது உண்டு. எல்லா மாஸ்டர்ஸூம் என் நண்பர்கள் தான். எனக்கு எது தேவை என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் எப்படிச் செய்வார்கள் என்று எனக்கும் தெரியும். அதனால் பிரச்சினைககு இடமில்லை.வெறும் கமர்ஷியல் படங்களை மட்டும் இயக்கினால் போதும் என்று நினைக்கிறீர்களா அல்லது சமுதாயத்துக்கு கருத்து சொல்ல ஆசை உண்டா?எல்லாம் செய்ய ஆசை இருக்கிறது. சமூகப் பிரச்சினையை சொல்ல வேண்டும். ஏதாவது கருத்து சொல்ல வேண்டும். இப்படி நிறைய ஆசை உண்டு.அதற்காக எப்படித் தயார்படுத்தி வருகிறீர்கள்?நான் நிறைய படிப்பதில்லை. நிறைய பார்ப்பேன். நிறைய கேள்விப்படுகிறேன். அதிலிருந்து நிறைய தெரிந்து கொள்கிறேன்.ஒரு நடிகராக சொகுசாக இருந்தீர்கள். இயக்குநரான பிறகு டென்ஷன், பொறுப்பு, வேலை அதிகம். வேர்க்க விறுவிறுக்க வேலை செய்ய வேண்டுமே..?நான் என்றைக்கும் என்னை ஒரு டெக்னீஷியனாத் தான் நினைப்பேன். நடித்த போதும் டான்ஸ் மாஸ்டராக இருந்த போதும் வேர்வை சிந்தி உழைத்திருக்கிறேன். சொகுசாக இருந்ததில்லை. நான் என்றைக்கும் உழைப்பாளி தான். இப்படித் தான் நான் இன்றைக்கும் நினைக்கிறேன்.மீண்டும் நாயகனாக நடிப்பீர்களா?அதற்கு முன நிறைய யோசிக்க வேண்டும். அதற்கு ஏற்ற மாதிரி எல்லாமும் அமைந்தால் யோசிக்கலாம்.இயக்குநராகி முன்னணி நாயகர்களை இயக்குகிறீர்கள். மல்டி ஸ்டார் படங்களைத் தருவீர்களா?எனக்கு அந்த ஆசை இருக்கிறது. ஆனால் எல்லாமும் சரியாக அமைய வேண்டும். அதற்கான சப்ஜெக்ட் கிடைக்க வேண்டுமே. "
சிவாஜி"யில் இப்படி பணியாற்றி இருக்கிறீர்கள்?அது முழுக்க முழுக்க ஷங்கர் சார் படம். அதில் நான் செய்தது என்று சொல்ல முடியாது. "ஸ்டைல்" பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறேன். வெளிநாட்டில் படமான பாடல் அது.