என் வழி தனி வழி! - "மச்சக்காரன்" ஜீவன்
திரை நாயகர்களில் பல ரகங்கள் உண்டு. அநியாயத்துக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நல்லதே செய்வார்கள். ஏழைக்கு உதவுவார்கள். சண்டையில் வெற்றி மட்டுமே பெறுவார்கள். தாய்ப்பாசம் காட்டுவார்கள். தேச பற்றுடன் இருப்பார்கள். இவர்கள் கதாநாயகர்கள். கெட்டதையே செய்பவர்கள் வில்லன்கள். இவர்கள் தவிர நல்லவன் மாதிரி இருக்கும் கெட்டவன் நாகரீகமாக இருக்கும் கெட்டவன், கெட்டவன் போலத் தெரியும் நல்லவன் இப்படி ஒரு ரகமுண்டு. இதற்கு போட்டிகள் இல்லை. இப்படிப்பட்ட வேடம் ஏற்று இப்போது தனக்கென தனியிடம் பெற்று இருக்கிறார் ஜீவன்.ஒரு மாலை வேளையில் ஜீவனுடன் உரையாடிய போது...!இப்படி நெகடிவ் ரோல்களில் நடிப்பதை தொடர்வீர்களா?ரசிகர்கள் ஆதரவு தரும் வரை தொடர்வேன். இப்படி நான் நடிக்கும் கதையை கேரக்டரை ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்றால் நான் நடிக்கணும். அதுதான் சரி. வழக்கமான ரூட் இல்லை. புது ரூட் தான். அதனால் தான் ஆடியன்ஸ் ரசிக்கிறாங்க.அதற்காக ஒரு ஹீரோ இப்படி நடிப்பது சரியா?நல்லவர்களா நடிக்கிறதுக்கு நிறைய பேர் இருக்காங்க. என்னைப் போல சற்று மாறுபட்டு நெகடிவ் ரோல் பண்ண எல்லா ஹீரோவும் முன்வர மாட்டாங்க. அந்த இடைவெளியை நிரப்ப நான் இருக்கேன். நல்லவங்களா வர்ற ஹீரோக்களைப் பார்த்து ஜனங்களுக்கு சலிப்பு வரக்கூடாது அல்லவா? எனக்குன்னு இதுதான் இமேஜ்னு அமையுறதுல எனக்கு விருப்பமில்லை. பாசிடிவ், நெகடிவ் பற்றிய பிரச்சினை எனக்கில்லை. கேரக்டர் தான் முக்கியம்.உங்களுக்கான இந்த இடத்தை தக்க வைக்க விருப்பமா? இதிலிருந்து விலகிட ஆசையா?நான் என்ன நடிக்கிறதுங்கறதை முடிவுபண்றது நானில்லை. படம் பார்க்கிறவங்க தான். அவங்க ரசிக்கிறாங்கன்னா அதை செய்றதுல எனக்கு என்ன தயக்கம். என் படங்களை தொடர்ந்து ரசிச்சா போய்க்கிட்டே இருப்பேன். அவங்களுக்குப் பிடிக்கலைன்னா தானே அடுத்ததை பற்றி யோசிக்கணும். நடிப்பு தொழில்.. இதில் இப்படி நடிக்கமாட்டேன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ரசிகர்களுக்குப் பிடிக்கணும் அதுதான் முக்கியம்.நெகடிவ் ரோலில் நடிக்கும் நீங்கள் வில்லனாக நடிப்பீர்களா?நான் செய்வது நெகடிவ் போல தோன்றலாம். ஆனால் நாயகன் கோணத்தில் அது பாசிடிவ் தான். நான் ஹீரோவாய்ட்டேன். அதனால் வில்லனா நடிக்க மாட்டேன்.கதையை எப்படி தேர்வு செய்து நடிக்கிறீர்கள்?நான் ஒரு ரசிகனா இருந்து பார்ப்பேன். இதில் ஜீவன் நடிச்சா நல்லா இருக்கமான்னு யோசிப்பேன். சரின்னு பட்டுச்சுன்னா அந்த கேரக்டர்ல நடிக்க சம்மதிப்பேன். இதுதான் நான் கதை தேர்வு செய்யும் ரகசியம்.மச்சக்காரன் எப்படி இருப்பான்?நான் இதுவரை நடிச்ச "யுனிவர் சிடி", "காக்க காக்க", "திருட்டுப் பயலே", "நான் அவன் இல்லை" படங்களிலிருந்து "மச்சக்காரன்" நிச்சயமா வேற டைமன்ஷன்ல இருக்கும். புது கோணம். புது வடிவமா என் கேரக்டர் இருக்கும். என் கேரக்டர் பற்றி டைரக்டர் தமிழ்வாணன் சொல்லும் போது தெருவுல உள்ள பத்து வீட்டிற்கு ஒரு வீட்லயாவது இப்படிப்பட்டவன் இப்பான்னு சொல்வார். அதை படம் பார்த்த பிறகு எல்லாரும் ஏத்துப்பாங்க. மச்சக்காரன் பற்றி தப்பா நினைக்கிறாங்க. அவன் எப்படிப்பட்டவன்னு இபப்வே அதிகமா சொல்லக் கூடாது. ஆனால் இவன் வித்தியாசமானவனா இருப்பான்.ஜீவனுக்கு யாரைப் பின்பற்றி நடிக்க ஆசை?எல்லார் நடிப்பும் எனக்குப் பிடிக்கும். ஆனால் யாரையும் பின்பற்ற மாட்டேன். எனக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கட்டுமே. அப்படியே அதில் போகவே விருப்பம். அதில் தான் எனக்கு சந்தோஷம். நிம்மதி."
திருட்டுப் பயலே", "நான் அவன் இல்லை" போல "மச்சக்காரன்" படத்திலும் பெண்களை ஏமாற்றும் வேடமா?எல்லாரும் அப்படித்தான் நினைக்கிறாங்க. கேட்கிறாங்க. ஒரு விஷயம் தெரியுமா? "மச்சக்காரன்", "நான் அவன் இல்லை" படத்துக்கு முன்னாடி ஒப்பந்தமான படம். "மச்சக்காரன்"னு சொன்னால் பொதுவா யோகக்காரன் அதிர்ஷ்டசாலின்னுத்தான் அர்த்தம். ஆனால் பெண்கள் விஷயத்தில்னு தப்பா நினைக்கிறாங்க. பொதுவா லக் உள்ளவன்கிற வகையிலதான் இந்த தலைப்பு வச்சிருக்காங்க. இதில் நான் பண்றது நிச்சயமா பெண்களை ஏமாற்றும் கேரக்டர் இல்லை.நடிக்கும் முன்பு எதை முக்கியமாகப் பார்க்கிறீர்கள்?இந்தக் கதை ஆடியன்சுக்குப் பிடிக்குமா. இதனால தயாரிப்பாளருக்கு லாபம் வருமா..ங்கிறதை முதல்ல பார்ப்பேன். நான் நடிச்ச எல்லா படங்களும் இந்த வகையில தான் அமைஞ்சது."
யுனிவர் சிடி" கூடவா அப்படி அமைந்தது?"
யுனிவர் சிடி" சரியாப் போகலைன்னாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வரலைங்கிறதுதான் உண்மை. அது வசூல் செய்யாததற்கு கதை மட்டுமே காரணமல்ல. வேறு சில காரணங்களும் இருக்கு.