Entertainment Film Interview 0705 22 1070522110_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காத்திருக்கிறேன் நல்ல கதைக்காக!-சிபி

Advertiesment
காத்திருக்கிறேன் நல்ல கதைக்காக!-சிபி

Webdunia

இது வாரிசுகளின் கொடி பறக்கும் காலம். திரையுலகில் ஏகப்பட்ட வாரிசுகள் நுழைந்து இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் சிலருக்கு மட்டுமே கோலோச்ச அங்கீகாரம் கிடைக்கிறது; கொடி கட்ட அனுமதி கிடைக்கிறது. அப்படி அங்கீகாரம் கிடைத்திட தகுதியுள்ளவர்கள் பட்டியலில் அண்மையில் இணைந்திருக்கிறார் சிபி. "லீ" வெற்றியில் சிபிக்குள் உற்சாகம் பொங்குகிறது. பட வெற்றி அவரை இனி தலைகீழாக மர்றறிவிடும். இனி மேல் "சிபி", "பிசி"யாகி விடுவார்.

இனி சிபி!

ஒரு பாப்புலர் நடிகரின் மகன் என்பது உங்களுக்கு பெரிய பலம் தானே..?

"அப்பா இந்தத்த துறையில இருக்கார். அவரோட பேர் புகழ் என்பது எனக்கு ஒரு விசிட்டிங் கார்டு. அவ்வளவு தான். சத்யராஜ் மகன்கிறதுக்காக ஒரு இடத்தில உள்ள விடுவாங்க. யாரு நீங்கன்னு கேட்கிற போது சத்யராஜின் மகன்குறது அறிமுகம் மாதிரி அமையலாம். ஆனா சத்யராஜின் மகன்கிறதுக்காக எனக்குப் படம் வந்திடாது, இன்னாரின் மகன்கிறதுனால நம்மளை வச்சி முதல் போடுவாங்கன்னு சொல்ல முடியாது. அதனாலதான் அப்பாவோட பேரு கேட்டுக்குள் நுழைய உதவலாம். உள்ளே போய் நிற்கணும்னா நான் ஏதாவது செய்தால்தான் உண்டு. அப்போதான் நிற்க முடியும். நிலைக்க முடியும்."

அதற்காகத்தான் அப்பாவுடன் பாதுகாப்பாக சேர்ந்து பல படங்கள் நடித்தீர்களா?

"இதுக்கும் மறுபடியும் அதே பதிலைச் சொல்ல வேண்டியிருக்கு. அப்பா பிள்ளைங்கிறதால மட்டும் நாங்க சேர்ந்து நடிக்கலை. சேர்ந்து நடிக்க வைக்கலை. எங்க காம்பினேஷன், எங்க லொள்ளு பல பேருக்கு பிடிச்சிருந்தது, ரசிக்கவும் செஞ்சாங்க. அதனாலதான் சேர்ந்து நடிச்சோம்."

இந்தக் கூட்டணியை எது வரை தொடர விருப்பம்?

"எத்தனைக் காலம் அப்பாவுடன் சேர்ந்து நடிப்பீங்க. தனியே வரமாட்டீங்களா.. வர நம்பிக்கை இல்லையா.. இப்படியெல்லாம் கேட்டுட்டு இருந்தாங்க. இப்ப நான் தனியே நடிச்சு "லீ" சக்சஸஆகியிருக்கு. இது கூட ஒரு வகையில் அப்பாவோடு கூட்டு சேர்ந்து தான் ஜெயிச்சதா சொல்லணும். ஏன்னா அப்பாதான் "லீ"யின் தயாரிப்பாளர். அப்பா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி என்னை வச்சி முதல் படம் தயாரிச்சு வெற்றி பெற்றது எனக்கு பெரிய மகிழ்ச்சி. என் மேல் நம்பிக்கை வச்ச அப்பாவுக்கு நன்றி சொல்லணும்."

"லீ" பட அனுபவம் எப்படி?

"நான் பல படங்கள்ல அப்பாவுடன் சேர்ந்து நடிச்சேன். "கோவை பிரதர்ஸ்" முடிஞ்சதும் அடுத்து தனியா படம் பண்ணும் எண்ணத்துல இருந்தேன். அதுக்கேற்ற மாதிரி கதைகளை கேட்டுட்டு இருந்தேன். அப்போ என்கிட்டே பிரபு சாலமன் ஒரு கதை சொன்னார். அது எனக்குப் பிடிச்சு இருந்திச்சு. அவரோட "கொக்கி" படம் எனக்குப் பிடிச்சிருந்தது. அவரோட ஸ்டைல் நல்லா இருந்தது. இதையும் நல்லா பண்ணுவன்னு நம்பிக்கை வச்சோம். அதே மாதிரி செய்து காட்டிட்டார். "லீ" படத்தில் நடிச்ச போது ஒவ்வொரு காட்சியையும் உற்சாகமா ஈடுபாட்டோட பண்ணினோம். கடினமான உழைப்பு. அதுக்கேற்ற பலன் கிடைச்சிருக்கு."

எப்படிச் சொல்கிறீர்கள்?

"படம் பார்த்து பல பேர் பாராட்டினாங்க. அதில் பெரும்பாலானவங்க படத்தோட சேஸிங் காட்சிகளைப் பாராட்டினாங்க. பொதுவா சினிமாவில் வர்ற கார் சேசிங் காட்சிகளை வழக்கமா பெசன்ட் நகர்லியும் வைர வேண்லயும் ஜனங்க நடமாட்டம் வாகன நெரிசல் இல்லாத ஞாயிற்றுக் கிழமைகளில் தான் எடுப்பாங்க. ஆனா "லீ"யில் சேஸிங் காட்சிகளை காலை நேரங்களில் மவுண்ட் ரோடு, நூறடி ரோடு இப்படி நெரிசல் உள்ள இடங்களில் கஷ்டப்பட்டு எடுத்தோம். இன்னைக்கு என்னைப் பல பேர் பாராட்டுறாங்க. ஆனா இதன் பின்னணியில் பிரபு சாலமன் இருக்கார்."

நீங்களும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டீர்கள். அப்படித்தானே?

"இப்பக் கேட்டால்.. ஆமாம்னு சொல்லலாம். எனக்கும் ஆக்ஷன் படங்கள் தான் பிடிக்கும். எனக்கும் ஆக்ஷன் ஹீரோவாகத் தான் ஆசை. அதற்கான முதல்படி "லீ"ன்னு தைரியமா சொல்லலாம்."

"லீ" படம் தந்த பாடம் என்று கதைக் கூறுவீர்கள்?

"கடின உழைப்புக்கு நிச்சயமா பலன் உண்டு. வித்தியாசமான முயற்சிக்கு நிச்சயமா வரவேற்பு கிடைக்கும். இதுதான் லீ மூலம் தெரிஞ்சுக்கிட்ட பாடம் கால்பந்து பற்றி நிறைய தெரிஞ்சுக்க இந்தப் படம் உதவியது."

இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்?

"எல்லாரையும் பிடிக்கும். எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான். "லீ" பார்த்து ஜெயம் ரவி, சிம்பு, விஷால்னு பாராட்டியது மகிழ்ச்சியான விஷயம். எங்களுக்குள் சரியான புரிதல் இருக்கு."

ஆக்ஷன் ஹீரோவாகிவிட்ட பிறகு வித்தியாச வேடங்களுக்கு வேலை இல்லையா?

"அப்படிச் சொல்லக் கூடாது. எல்லாவித கேரக்டர்களும் செய்யணும்னு ஆசை இருக்கு. எந்த வித வித்தியாச முயற்சிக்கும் நான் தயாராக இருக்கேன். அழுத்தமான கேரக்டரும் செய்வேன். முடியும்கிற நம்பிக்கை இருக்கு. சிபியால் முடியும்னு பிரபு சாலமன் நம்பிய மாதிரி மற்றவங்களும் நம்பணும். அதுக்கேற்ற மாதிரி தகுதியை வளர்த்துக்க விரும்பறேன். அதனாலதான் "லீ" முடிஞ்சவுடன் அடுத்த படத்தை தேர்வு செய்றதுல நிதானம் காட்டுறேன். நல்ல கதை, பாத்திரம், டைரக்டர் அமைய வேண்டியது ஒரு நடிகருக்கு முக்கியம்னு எனக்குப் புரிஞ்சிருக்கு. அதனால் தான் காத்திருக்கேன்."

Share this Story:

Follow Webdunia tamil