இதுவரை நூறு படங்களில் நடித்து முடித்திருக்கும் சரத்குமார், சதம் அடித்த திருப்தியில் மகிழ்ச்சியாக இருக்கிறார். நடித்து முடித்துள்ள "பச்சைக்கிளி முத்துச்சரம்" குறித்து ஆவலாக இருக்கிறார். இப்போது ஏராளமான புதுப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக இருக்கிறார். எனவே பேட்டிக்கான கேள்விகளை எதிர்கொள்வதில் உற்சாகமாக இருக்கிறார்.
இனி சரத்துடன் பேசலாம்..!
நூறு படங்கள் முடித்து விட்டீர்கள் என்ன உணர்கிறீர்கள்..?
மகிழ்ச்சியாக இரக்கிறது. திருப்தியாக இருக்கிறது. பெருமையாக இருக்கிறது. ஆனால் நிறைவாக உணரவில்லை. ஏனென்றால் நான் சினிமாவில் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய்ய்ய இருக்கிறது. சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது.
தலைமகன் இயக்கிய அனுபவத்தில் என்ன புரிந்தது?
இயக்குநரின் வேலை என்பது எவ்வளவு கடினமானது. தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களையும் அறிந்துகொள்ள உதவியது. இயக்குநர் ஸ்தானம் பொறுப்பும், பணிச் சுமையும் நிறைந்த ஒரு பெருமையான ஸ்தானம் என்பது புரிந்தது.
நேற்று வரை கட்சி அரசியலில் இருந்தீர்கள். இன்று எந்தக் கட்சியிலும் இல்லை என்கிற நிலை. நாளை உங்கள் நிலையில் என்ன மாற்றம் வரும்?
நான் தி.மு.க.வில் பத்தாண்டுகள் இருந்தேன். அ.தி.மு.க.வில் ஆறு மாதம் கூட இருக்க முடியவில்லை. இனி நமக்கு கட்சி எதுவும் வேண்டாம். நான் ஒரு பொது மனிதனாக எந்தக் கட்சியும் சாராத ஒரு நடிகனாக கலைஞனாக இருந்துவிட்டுப் போகிறேன். இனி காங்கிரஸ் தே.மு.தி.க. எதற்கும் செல்லமாட்டேன்.
காமராஜ் மணி மண்டப முயற்சிகூட அரசியலுக்கு வர விரும்பும் ஆசையின் வெள்ளோட்டம் என்கிறார்களே..?
யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜ் ஒரு மாபெரும் தலைவர். கட்சி, சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த ஒப்பற்ற தலைவர். அவருக்கு மணிமண்டபம் அமைக்கும் என் முயற்சியை அரசிலாக்க வேண்டாம். இதில் அரசியல் எதுவும் கிடையாது. இதற்கு 17 ஏக்கர் இடம் வாங்கிவிட்டோம். இன்னும் 5 ஏக்கர் வாங்கும் முயற்சியில் இருக்கிறோம். இதை ஒரு மாபெரும் முயற்சியாக மாற்ற பல்வேறு இன மக்களை தலைவர்களைச் சந்தித்து வருகிறேன். மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவை ஏப்ரல் 21ல் நடத்த உள்ளோம்.
மீண்டும் இயக்குவீர்களா?
இந்த 2007ஐப் பொறுத்தவரை ஏழு படங்கள் இருக்கின்றன. நடிப்பதில் முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்றிருக்கிறேன். இதையெல்லாம் முடிக்க வேண்டும். நடிப்பிலேயே நிறைய சாதிக்க வேண்டும். நல்லதொரு வாய்ப்பு வந்தால் மீண்டும் இயக்குவேன்.
இந்தியில் கதாநாயகர்கள் எல்லாம் நெகடிவ் கேரக்டர்களில் நடிக்கிறார்கள் நீங்கள் இப்போது வில்லனாக நடிப்பீர்களா?
நான் தயார். இந்தியில் அமிதாப் "ப்ளாக்"கில் நடித்தார். அது யாரும் எதிர்பார்க்காத கேரக்டர். ஸ்ருத்திக் கூட வில்லனாக நடித்து இருக்கிறார். எனக்கும் மாறுபட்ட முறையில் வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் ஒரு படத்தில் நான் வில்லனாக நடிக்க இருக்கிறேன். நடிகனை நல்ல முறையில் மோல்டு பண்ணுவது இயக்குனர்கள்தான். அப்படிப்பட்ட இயக்குநர் இயக்கும் படத்தில் வில்லனாக நடிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை.
நேற்று இன்று நாளை - சரத்குமார்
"பச்சைக்கிளி முத்துச்சரம்" படம் பற்றி..?
ஒரு நடிகன் ஜெயிச்ச வேண்டும். பிரகாசிக்க வேண்டும் என்றால் நல்ல இயக்குநரின் படத்தில் பணிபுரிய வேண்டும். நல்ல இசையமைப்பாளர் சிறந்த ஒளிப்பதிவாளர் இப்படி ஒவ்வொருவராலும் செதுக்கப்பட வேண்டும். இயக்குநர் கௌதம் என்னைத் தேடிவந்து கதை சொன்னபோது எனக்குப் பெருமையாக இருந்தது. அவர் நட்சத்திரங்களுக்குக் கதை தேடுபவர் அல்ல. கதைக்காக நடிகர்களைத் தேடுபவர். அவர் என்னைத் தேடி வந்தது. நான் தேவைப்பட்டதால்தான் என்பதில் மகிழ்ச்சி. "பச்சைக்கிளி முத்துச்சரம்" வித்தியாசமான யதார்த்தமான கதை. 5000 பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 4000 பேரில் வாழ்க்கையில் நடந்ததாக இருக்கும். எத்தனை நாளைக்கு அரிவாள், கத்தி, ரத்தம், ஸ்லோவோடின், கேமரா பார்த்து வசனம் பேசுவது என்று போரடிப்பது என்று அலுத்துக் கொள்ளும் ரசிகர்களுக்கு நிச்சயமாக இது வித்தியாசமான படம். இதில் நான் ஒரு மெடிக்கல் ரெப். என்னை அழகாகக் காட்டியுள்ளார் கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா. நான்இதில் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன். ஹரிஸ் ஜெயராஜ் இசை நன்றாக உள்ளது. ஜோதிகா ஆண்ட்ரியா இதில் சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படம் எனக்கு 2007ன் நல்ல தொடக்கமாக இருக்கும். ஆஸ்கார் பிலிம்ஸ்தான் வெளியிடுகிறது. இதுவே படத்திற்கு ஒரு தர முத்திரை என்று கூறலாம்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு பற்றி நடிகர்கள் நடிகர் சங்கம் வாயை திறக்கவில்லை என்கிறார்களே..?
நடிகர் சங்கம் எல்லாவற்றையும் பற்றி கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அது கூடாது. காவிரிப் பிரச்சினை சென்சிடிவானது. அதுபற்றி ஏதாவது பேசி குழப்பம் நேர வாய்ப்பாவிவிடக் கூடாது அல்லவா. அங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள். இங்கும் கன்னடர்கள் வாழ்கிறார்கள். இரு மாநிலத்திலும் சுமுகம் நிலவ வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. காவிரிப் பிரச்சினை. நருவர் மன்றத் தீர்ப்பு பற்றி தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் முந்திரிக் கொட்டை போல நான் எதுவும் கூறக் கூடாது. தமிழ் நாட்டுக்கு நீதி கிடைக்காமல் வஞ்சிக்கப்படும் நிலை வந்தால் நாங்கள் அப்போது வந்து போராடுவோம்.
தமிழக அரசின் வரிவிலக்கு, திரையரங்க டிக்கெட் குறைப்பு போன்றவை மக்களைச் சேரவில்லை. இதற்குக் காரணம் நடிகர்களின் சம்பளம் தான். அதைக் குறைக்க வேண்டும் என்கிறார்களே?
சினிமா ஒரு டீசபயnணைநன தொழிலாகவும் இல்லை. னுளைடிசபயnணைநன தொழிலாகவும் இல்லை. சில விஷயங்கள் சரியாக உள்ளன. சில விஷயங்கள் ஊடிசயீடிசயவந ஆக இல்லை. நெளிவு சுளிவுகளுடன் தான் போய்க் கொண்டு இருக்கிறது. சம்பளம் இங்கு கொடுக்கப்படும் ஒன்றுதான். கேட்டுப் பெறுவதாக இல்லை. மார்க்கெட் இருந்தால் கொடுப்பார்கள். மார்க்கெட் இல்லாமல் வீட்டில் தூங்கிக் கொடுப்பவரை எழுப்பி யாரும் படம் கொடுப்பதில்லை. சம்பளமும் கொடுப்பதில்லை. 12 ஆண்டுகளுக்கு முன் 15 படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமானேன். ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டேன். சரத் இனி அவ்வளவுதான் என்றார்கள். இனி பிழைக்கமாட்டான் என்று 14 படங்களுக்கு கொடுத்த அட்வான்ஸை வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இதுதான் சினிமா உலகம். எனவே சம்பளக் குறைப்பு என்பதை ஒருவர் உட்கார்ந்து முடிவு செய்ய முடியாது. பலர் பேசி முடிவு எடுக்க வேண்டிய விஷயம் இது.
இப்போது நடித்து வரும் படங்கள்..?
"பச்சைக்கிளி.." இம்மாதம் வெளிவருகிறது- "வைத்தீஸ்வரன்", "போக்கிரி" கம்பெனிக்கு ஒரு படம். கே.எஸ்.ரவிகுமாரின் அடுத்த படம் "வாரணம் ஆயிரம்" படத்துக்குப் பிறகு கௌதம் இயக்கும் படம் ஹரிஹரன் இயக்கத்தில் மலையாளம் படம் ஒன்று இப்படி ஏழு படங்கள் உள்ளன.