ஷில்பா ஷெட்டியை திரையில் பார்க்க முடியவில்லை என்று வருத்தப்படும் அவரது ரசிகர்களை நூறு சதம் திருப்திப்படுத்த வருகிறது, தி டிசையர் (The Desire).
இந்தோ - சீனா கூட்டுத் தயாரிப்பான இந்தப் படத்தில் தனது நடிப்புத் திறமையுடன் நடனத் திறமையையும் காட்டியிருக்கிறார் ஷில்பா. நடனம் என்றால், திரைப்பட நடனம் அல்ல, பாரம்பரியமிக்க ஒடிஸி நடனம்.
இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் ஷில்பா, தி டிசையரில் ஒடிஸி நடனம் ஆட வேண்டும் என்றதும் முறைப்படி பயிற்சி எடுத்துக் கொண்டேன். நடனம் ஆடியது மிகவும் திருப்திகரமாக இருக்கிறது என்றார்.
ஷில்பாவுக்கு ஒடிஸி நடனம் தெரிந்தாலும், இந்தப் படத்துக்காக ஒடிஸி நடனத்தில் விற்பன்னரான Ratikant Mohapatra விடம் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார்.
தி டிசையரின் ஹைலைட்களில் ஷில்பாவின் நடனமும் ஒன்று என்பதை சொல்லத் தேவையில்லை.