அக்சய் குமாரின் சிங் இஸ் கிங் உள்பட அனைத்து இந்திப் படங்களின் வசூல் சாதனைகளையும் உடைத்திருக்கிறது, கஜினி.
கஜினிக்கு முன் வெளியான ஷாருக்கின் பட வசூலை முந்தியிருப்பதுடன் அந்தப் படத்தைவிட ஒன்றரை மடங்கு உள்ளூரில் மட்டும் வசூலித்துள்ளது, முருகதாஸின் இந்தப் படம்.
அனைவரும் எதிர்பார்த்த அக்சய் குமாரின் சாந்தினி சவுக் டூ சைனா படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருப்பதால் கஜினி கொடிதான் உயரத்தில் பறக்கிறது. விதிவிலக்கு இங்கிலாந்து.
அங்கு ஷாருக்கின் படத்தைவிட மிகக் குறைவாகவே கஜினி வசூலித்துள்ளது. ஏறக்குறைய ஐந்து கோடி. ஷாருக் படம் பத்து கோடியை தாண்டியிருக்கிறது. ஏன் இந்த குறைவான வசூல்?
படத்தில் வன்முறை அதிகம் என்பதால் அனைவரும் பார்க்கத் தகுந்த படம் என்ற சான்றிதழ் வழங்காமல், சிறுவர்கள் பார்க்கக் கூடாத 15 சான்றிதழை வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த குறைவான கலெக்சன்.