Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதலிடத்தில் க‌ரீனா கபூர்

Advertiesment
முதலிடத்தில் க‌ரீனா கபூர்
, செவ்வாய், 6 ஜனவரி 2009 (20:09 IST)
இன்றைய தேதியில் பாலிவுட்டின் டாப் ஹீரோயின் யார் என்று கேட்டால், தயங்காமல் க‌ரீனா கபூ‌ரின் பெயரை சொல்லலாம். அவர் நடிக்கும், நடிக்கப் போகும் படங்களின் லிஸ்டை பார்த்தாலே இது பு‌ரியும்.

கரண் ஜோஹா‌ரின் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார், க‌ரீனா. தற்போது இதன் படப்பிடிப்பு பிலடெல்பியாவில் நடந்து வருகிறது. முஸ்லிம் பெண்ணாக இதில் நடிக்கிறார் க‌ரீனா. இதுவரை நடித்த படங்களில் சவாலான வேடம் இது என்பது அவரது ஸ்டேட்மெண்ட்.

ரா‌ஜ்குமார் ஹிரானியின் த்‌ி இடியட்ஸ் படத்தில் அமீர் கானின் ஜோடியாக நடிப்பதும் இவர்தான். சமிபத்தில் அமீர், க‌ரீனா சம்பந்தப்பட்ட காட்சிகளை லடாக்கில் படமாக்கினார், ஹிரானி. க‌ரீனா போல் அனாடமி கொண்ட நடிகை இன்டஸ்ட்‌ரியில் இல்லை என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார் அமீர்.

கத்‌ரினா கைஃபின் காதலர் சல்மான் சொந்தமாக தயா‌ரிக்குமmain aur mrs khanna படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதும் க‌ரீனா கபூர்தான். இதுதவிர ச‌ஜித் நாடடியட்வாலாவின் kambhakt ishq, காதலர் சைஃப் அலிகானின் ஏஜென்ட் வினோத் என முக்கியமான படங்கள் அனைத்திலும் இவரே ஹீரோயின்.

ஆக, யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார், க‌ரீனா.

Share this Story:

Follow Webdunia tamil