அமீர் கானும், கரீனா கபூரும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. குரு படத்துக்குப் பிறகு மணிரத்னம் லஜ்ஜோ என்ற படத்தை இயக்குவதாகவும், அதில் அமீர், கரீனா இணைந்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.
துரதிர்ஷ்டவசமாக அந்த ப்ராஜெக்ட் ட்ராப்பாக, இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போனது. தற்போது ராஜ்குமார் இரானியின் 3 இடியட்ஸ் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
கஜினி படத்தின் போது அசினை புகழ்ந்ததை போல தற்போது கரீனாவை புகழ்ந்து வருகிறார் அமீர் கான். அதேபோல் அமீரின் புகழ் பாடுவதுதான் இப்போது கரீனாவின் வேலை.
லடாக்கில் நடந்த படப்பிடிப்பில் இருவரின் நெருக்கத்தைப் பார்த்தவர்கள் சபாஷ் சரியான ஜோடி என்று பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கரீனா. இவரது தந்தையாக பூமன் இரானி நடிக்கிறார்.
படத்தின் 3 இடியட்களில் ஒருவர் மாதவன் என்பது தெரியும்தானே.