தூல் கா பூல், வாக், கனூன், கும்ராஜ், நிகாஹ் போன்ற பிரபல இந்தி திரைப்படங்களைத் தயாரித்தவர் பல்தேவ் ராஜ் சோப்ரா (94). நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த இவர் இன்று காலை மும்பை ஜுகுவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.
பி.ஆர். பிலிம்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படங்களைத் தயாரித்து வந்த பி.ஆர். சோப்ரா 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர். மகாபாரதம் உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ள இவரது படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இவருக்கு சினிமா தயாரிப்பாளர் ரவி சோப்ரா என்ற மகனும், 2 மகள்கள்களும் உள்ளனர். மற்றொரு பிரபல தயாரிப்பாளரான யாஷ் சோப்ரா, இவரது தம்பியாவார்.
இன்று மாலை ஜுகுவில் அவரது இறுதி சடங்கு நடக்கிறது.