மாதவனின் ஆசைகளில் ஒன்றை தீர்த்து வைத்துள்ளார் இயக்குனர் கரண் ஜோஹர்.பாலிவுட்டின் முக்கியமான நடிகர்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார் மாதவன். அமீர் கானுடன் இரண்டாவது முறையாக த்ரீ இடியட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். அமீர் கானுக்கு இணையான வேடம் இது என்கிறார்கள் படத்தில் பணிபுரிகிறவர்கள்.தீன் பத்தி படத்தில் மாதவனின் கோ ஸ்டார் யார் என்று பார்த்தால் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் (ஆனால் அவர் ஒரு போதும் தன்னை இப்படி அழைத்துக் கொண்டதில்லை).
அமுல்பேபி முகத்துடன் நடிப்பில் அதகளம் பண்ணும் மாதவனை நேரடியாகவே புகழ்ந்திருக்கிறார் அமிதாப்பச்சன். கூட்டி கழித்துப் பார்த்தால் மாதவன் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர் ஷாருக்கான் மட்டுமே. அந்த குறையைதான் தீர்த்து வைத்துள்ளார் கரண் ஜோஹர்.
இவரின் புதிய படம் மை நேம் இஸ் கான் படத்தில் ஷாருக்கின் தம்பியாக நடிக்கிறார் மாதவன். ஒரே நேரத்தில் அமீர், அமிதாப், ஷாருக் என பாலிவுட்டின் 3 முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன்.