Entertainment Film Indiancinema 0810 07 1081007090_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேஷன் பீவர்!

Advertiesment
பேஷன் பீவர் மதூர் பண்டார்கர் கங்கனா ரனவத் பிரியங்கா சோப்ரா
, புதன், 7 ஜனவரி 2009 (19:59 IST)
மதூர் பண்டார்க‌ரின் புதிய படம் பேஷன் முடிவுக்கு வந்துள்ளது. ஹைதராபாத்தில் நடந்த கடைசி கட்ட படப்பிடிப்பில் நிறைய சென்டிமென்ட் காட்சிகள். மதூர் பண்டார்கரே உணர்ச்சிவசப்பட்டார் என்றால் மற்றவர்களை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

படத்தின் கதாநாயகிகள் பி‌ரியங்கா சோப்ராவும், கங்கனா ரனவத்தும் சிறப்பாக ஒத்துழைத்ததாக நெகிழ்ந்து போய் கூறினார் மதூர். படத்தின் கேரக்டருடன் இருவரும் ஒன்றிவிட்டதாக மேலும் அவர் பாராட்டினார்.

இது ஒரு சிறந்த அனுபவம் என்று பேஷன் படத்தில் நடித்ததை குறிப்பிட்டுள்ளார் பி‌ரியங்கா. அவரை வழி மொழிந்திருக்கிறார் கங்கனா.

தனது முந்தைய படம் ட்ராஃபிக் சிக்னலுக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது வாங்கியவர் மதூர். இவர் இயக்கிய நான்கு படங்களுமே விமர்சகர்களின் பாராட்டை பெற்றதால் பேஷன் படத்தை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

படம் ஆவலை பூர்த்தி செய்யும் என்று உறுதியாக நம்பலாம்.

Share this Story:

Follow Webdunia tamil