அமீர்கான், மாதவன் நடிக்கும் 3 இடியட்ஸ் படப்பிடிப்பு சென்ற மாதம் இறுதியில் துவங்கியது. முதலில் மாதவன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி.
வினோத் சோப்ரா படத்தின் தயாரிப்பாளர். லடாக்கில் சில காட்சிகளை எடுக்கிறார்கள். அமீர்கான்- கரீனா கபூர் காம்பினேஷன் காட்சிகள் அவை.
3 இடியட்ஸ் பற்றி இன்னொரு சுவாரஷ்யமான செய்தி, இது பிரபல எழுத்தாளர் சேதன் பகத்தின் நாவலைக் கொஞ்சமாகத் தழுவி எடுக்கப்படுகிறது. Five point some one என்பது கதையின் பெயர்.
ஐஐடி மாணவர்களைப் பற்றிய கதை. அமீர்கான், மாதவன் என்று ரங்தே பசந்தி காம்பினேஷன். படம் 150 கோடிக்கு மேல் விலை போகும் என இப்போதே கணித்திருக்கிறார்கள்.