படத்தில் நடிப்பதுடன் மன்னிப்பு கேட்பதும் அமிதாபச்சனின் பணியாகி வருகிறது. அதுவும் ராஜ் தாக்கரேவின் கோபத்தைச் சம்பாதித்த பின், மாதத்திற்கு ஒருமுறை மன்னிப்பு... மனவருத்தம் இத்யாதி.
நாங்க உ.பி.யைச் சேர்ந்தவங்க, இந்தியில் பேசுவதுதான் எங்களுக்குப் பிடிக்கும் என்று பாடல் வெளியீட்டு விழாவில் பேசினார் ஜெயாபச்சன். மராட்டிய மாநிலத்தின் தலைநகரில் நின்று இந்தியில்தான் பேசுவோம் என்றால்...? பச்சன் குடும்பத்தினரின் போஸ்டர்களைக் கிழிக்கத் துவங்கினர் மராட்டிய நவநிர்மான் சேனா கட்சியினர். இந்தசெயல்பாடுகள் தொழிலை பாதிக்கும் என்பதால் உடனே மன்னிப்பு கேட்டார் ஜெயாபச்சன்.
தனது பிளாக்கில் வருத்தம் தெரிவித்த அமிதாபச்சன், ஜெயாபச்சன் எந்த உள்நோக்கமும் வைத்துப் பேசவில்லை. அவரது பேச்சில் யாராவது காயம்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தனியார் தொலைக்காட்சிகள் வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.
செலிபிரிட்டியாக இருப்பதால் தன்னை குறிவைத்து இப்படி சர்ச்சை கிளம்புகிறது எனவும் வருத்தப்பட்டார் பிக்.பி. பச்சான் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது!