கரீனா கபூர்- சைப் அலிகான் ஜோடிக்கு போகும் இடமெல்லாம் வரவேற்பு. இருவரும் இணைந்து நடித்த படம் சரியாக போகவில்லை. அதே நேரம் இருவரும் இணைந்து நடத்திய சார்ஜா நட்சத்திர கலை இரவுக்கு அமர்க்களமான வரவேற்பு. நிகழ்ச்சி டபுள் சக்சஸ்.
இந்த ஜோடி தங்கமுட்டையிடும் வாத்து என்பதை புரிந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அடுத்து ஐரோப்பா கலைப் பயணம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். சார்ஜாவை விட, இது மிகப் பெரிய சக்சஸாகும் என்பது அவர்கள் கணிப்பு.
ஓசியில் டூர், ஒரேயிடத்தில் தங்கலாம், சினிமாவில் நடிப்பதை விட காசு... மறு பேச்சில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் கரீனாவும், சைப்பும்.
திருமணத்துக்கு முன்பே தேனிலவு. கொடுத்து வைத்த ஜோடிகள்.