அமீர் கான், ஷாருக் கான் இருவரும் ஆர்ப்பாட்டமாக ஊசி வெடி வெடிக்க, ஆரவாரமே இல்லாமல் யானை வெடிகளாக வெடித்து தள்ளுகிறார் சல்மான் கான்.
அமீர் கானின் இரண்டு வருட புராஜெக்ட் கஜினி 90 கோடிகளுக்கு வியாபாரமானது. அதற்கே பாலிவுட்டில் பரபரப்பு. சல்மான்கானின் லண்டன் ட்ரீம்ஸ் 120 கோடிக்கு சத்தமில்லாமல் வியாபாரமாயியிருக்கிறது. இந்த சாதனையை சல்மானின் இன்னொரு படமான வீர் உடைத்துள்ளது.
வீர் படத்தை எரோஸ் இண்டர்நேஷனல் நூற்று ஐம்பது கோடிக்கு வாங்கியுள்ளது. ஏன் இந்த அதிகபடி விலை?
வீர் படத்தின் ஸ்கிரிப்ட் சல்மான் கானுடையது. மற்றப் படங்களை விட இதற்கு அதிக கவனம் எடுத்துக் கொண்டுள்ளார் சல்மான். அப்படி என்னதான் கதை எழுதியிருக்கிறார் சல்மான் கான் என்பதை அறிய அனைவருக்குமே ஆவல்.
இதனால் தான் வீருக்கு இத்தனை பிரமாண்ட விலை!