சாத்தானின் கவிதைகள் எழுதி சர்ச்சைக்குள்ளான சல்மான் ருஷ்டி. டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்கிறார்.
டொரண்டோ திரைப்பட விழாவில் இந்தியாவின் தீபா மேத்தா, ப்ரியதர்ஷன் இயக்கிய படங்கள் இடம்பெறுகின்றன. இன்ப அதிர்ச்சி, நந்திதா தாஸ் இயக்கியிருக்கும் பிராக் திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டிருப்பது.
குஜராத் மதக் கலவரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியிருக்கும் பிராக் இயக்குனரான நந்திதா தாஸுக்கு கன்னி முயற்சி. சின்ன பட்ஜெட்டில் தயாரான இதற்கு ஒளிப்பதிவு, இந்தியாவின் காஸ்ட்லி கேமராமேன், ரவி.கே. சந்திரன்.
வரும் 5 ஆம் தேதி திரையிடப்படும் இப்படத்தை எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அறிமுகப்படுத்தி பேசுகிறாராம்.
மீரா நாயர், தீபா மேத்தா, அபர்ணா சென், இப்போது நந்திதா தாஸ். ஆம்பளைங்க என்ன செய்றீங்கப்பா!