பிரச்சனை இல்லாத அன்பான குடும்பம் பாலிவுட்டில் உள்ளதென்றால் அது அமிதாப்பச்சன் குடும்பம்தான்.
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் சொந்தப் படம் எடுத்து பல கோடிகளை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவரை கை கொடுத்து மேலே தூக்கிவிட்டது குரோர்பதி எனும் டி.வி. நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சி மூலம் பல கோடி கடன்களை அடைத்தார்.
அதன்பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. அப்படி நடித்த நிறைய படங்கள் வெற்றி பெற்றன. அதில் மிகப்பெரிய வெற்றி 'பிளாக்' படம்.
மகன் அபிஷேக் பச்சன் விருப்பப்படி உலக அழகி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து வைத்தார். அழகான குடும்பமாகவும், பாசத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் 'மறக்க முடியாத சுற்றுலா' என்ற பெயரில் பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகளும் நடத்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட நியூயார்க்கில் கலை விழா நடைபெற்றது.
அப்படி கலை நிகழ்ச்சி நடத்திவரும் தொகையில் பல்வேறு பொது சேவைகளுக்கும் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள். எவ்வளவுதான் சம்பாதித்தாலும் நிம்மதியான வாழ்க்கைதான் ஒருவனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதை முழுமையாக அனுபவித்து வருகிறார் அமிதாப்.