பல லட்சம் ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்ற காதலனின் பகிரங்க குற்றச்சாட்டுக்குப் பின்பும் கலங்கவில்லை சமீரா ரெட்டி. அவரது இப்போதைய கவனமெல்லாம், நக்சல்கள் மீது.
தவறாக சொல்லவில்லை. அரசு தீவிரமாக வேட்டையாடிவரும் நக்சலைட்களைத்தான் சொல்கிறோம்.
சமீராவின் புதிய படம் "ரெட் அலார்ட்"டில் நக்சல்கள் பற்றி வருகிறதாம், வருகிறது என்ன வருகிறது...
படம் முழுக்கவே நக்சல்களை பற்றியதுதானாம். தொழில் பக்தி மிகுந்த சமீரா தற்போது நக்சல்கள் குறித்து நிறைய படித்து வருகிறாராம்.
அதிகமாக படித்து, நக்சல்களின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு, நக்சலைட்டாகும் வாய்ப்பும் இருப்பதால், சமீரா அலார்ட்டாக இருப்பது நல்லது.