நீல் அண்டு நிகில் படத்தில் துளிர்த்த உதய் சோப்ரா, தனிஷா காதல் இன்றைய நிலவரப்படி கருகும் நிலையில் உள்ளது.
நடிகை கஜோலின் தங்கையான தனிஷாவுக்கு சினிமாவில் தனியான அந்தஸ்து ஏதுமில்லை. பத்தோடு பதினொன்று. கிடைத்த சில வாய்ப்புகளும் கஜோலின் தங்கை என்ற லேபிளுக்கு கிடைத்தே.
இவருக்கும் உதய் சோப்ராவுக்குமான காதல் நாடறிந்தது. இரு வீட்டார் சம்மமதத்துடன் கெட்டி மேளம் கொட்டப்போகும் வேளையில் நிபந்தனை என்று நீள லிஸ்ட் ஒன்றை நீட்டியிருக்கிறார் உதய் சோப்ராவின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான யாஷ் சோப்ரா.
லிஸ்ட் நீட்டப்பட்ட பிறகு, தனிஷா உதய்யை தனது காதல் லிஸ்டிலிருந்தே நீக்கிவிட்டார். அப்படி என்ன இருந்தது லிஸ்டில்?
பலகோடி ரூபாய் வரதட்சணை கேட்டிருந்தாராம். யாஷ் சோப்ரா அப்படிப்பட்ட ஆளில்லை. தனிஷாவை கழட்டிவிட அப்படி கேட்டிருக்கலாம் என்கின்றனர் சிலர்.
எப்படியோ, முறிந்த காதலால் கசிந்த இதயத்துடன் திரிகிறார் உதய் சோப்ரா.