சினிமா நட்சத்திரங்களைப் பொறுத்தவரை அவர்கள் தேர்ந்தெடுத்த ஜோடிகளைவிட பத்திரிகைகள் சிண்டு முடிந்தபிறகே பலரும் சீரியஸாக காதலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஷாகித் கபூர், கரீனா கபூர் ஜோடி பிரிந்ததும், கரீனாவுக்கு சைப் அலிகான் கிடைத்துவிட்டார். சரியாகச் சொன்னால் சைப் அலிகானின் வரவே இந்த ஜோடியின் விரிவுக்கு ஒரு காரணம்.
கரீனாவுக்கு காதலர் கிடைத்தாலும், ஷாகித் தனியாகத்தான் இருந்தார். இந்திய ஊடகங்களால் இதை சகித்துக்கொள்ள முடியமா? ஷாகித்துக்கும் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கும் காதல் என்று கலகலத்தன.
அவர்கள் காதலை வெளியிட்ட நேரம் பார்த்து மும்பை ஹோட்டல் ஒன்றில் ஷாகித்தும், சானியாவும் சேர்ந்து டின்னர் சாப்பிட, காதல் செய்திக்கு கலர் ஏறியது.
காதலர்களிடம்( ! ) கேட்டால், அதெல்லாம் சும்மா என்கிறார்கள். ஆனால் பத்திரிகைகள் சும்மா விடும்போல தோன்றவில்லை.