ஷாகித் கபூர், சைப் அலிகான், ரன்பீர் கபூர் என பாலிவுட்டின் பொலி காளைகள் நாளொரு காதலும், பொழுதொரு காதலியுமாக பத்திரிகைகளின் பக்கங்களில் அடிபடுகின்றனர்.
இவர்கள் அனைவரையும்விட அனைத்து தகுதிகளும் கொண்டவர் விவேக் ஓபராய். ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலரான இவரைப் பற்றி ஒரு ரொமான்டிக் செய்தியாவது வரவேண்டுமே! ம்ஹும்... ஒன்றுகூட இல்லை.
ஐஸ்வர்யா ராயை பிரிந்த பின் ஓபராய் ஏறக்குறைய சன்னியாசி ஆகிவிட்டார். நடிக்கிற படங்கள் தவிர வேறு எதிலும் சிந்தையில்லை. இதனால் சில் வண்டுகளும் இவரைச் சுற்றி இல்லை.
விரைவில் வெளிவரயிருக்கும் "மிஷன் இஸ்தான்புல்" படத்தில் விவேக் ஓபராய்க்கு ரொமான்டிக் காட்சிகளே இல்லையாம். அதாவது அவரது சொந்த வாழ்க்கை மாதிரி.
உலக அழகி இருந்த இடத்தை வேறு அழகி நிரப்பும் வரை, ஓபராய் க்ரோனிக் பேச்சிலர்தான்!