ஷாருக்கான்- கஜோல் ஜோடியின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி அனைவருக்கும் தெரியும். இவர்களை அடிக்கும் இன்னொரு ஜோடி பாலிவுட்டில் இல்லை.
இயக்குனர் கரண் ஜோஹர் புண்ணியத்தில் இந்த ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு.
2001ல் கரண் ஜோஹரின் 'கபி குஷி கபி கம்' படத்தில் ஷாருக் - கஜோல் இணைந்து நடித்தனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு அதே கரண் ஜோஹரின் 'மை நேம் ஈஸ் கான்' படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி சேர்கின்றனர்.
அமெரிக்காவில் வாழும் ஒரு இந்திய தம்பதியை பற்றிய கதையிது. சங்கர்- இஷான்- லாய் இசையமைக்கிறார்கள். இப்போதே சில டியூன்கள் போட்டு விட்டதாக கூறுகிறார்கள்.
இந்தப் படத்தில் நடிக்க கஜோலை அணுகியபோது, என்னுடைய கணவர் இயக்குகிற படமாக இருந்தாலும், ஸ்கிரிப்டை படிக்காமல் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்று மொத்த ஸ்கிரிப்டையும் படித்து விட்டு சம்மதம் தெரிவித்துள்ளார்.