மாடல் கம் நடிகர் அர்ஜூன் சாம்பாலை கோபப்படுத்திய வதந்தி ஒன்று சமீபத்தில் பாலிவுட்டில் உலா வந்தது.
ராம்பாலுக்கு நடிப்பு அலுத்து விட்டது. புதிதாக ஏதேனும் அவர் செய்ய விரும்புகிறார். படம் ஒன்றை இயக்கும் முடிவில் இருக்கிறார் அவர். படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது ராம்பாலின் நண்பர் ஷாருக்கான்!
மேலே உள்ளது வதந்தியின் சாராம்சம். இதனை உண்மை என்று நம்பி ராம்பாலை நடிப்பதற்கு யாரும் அணுகாமல் இருந்திருக்க வேண்டும். கடுப்பான இந்த அழகான மாடல், யாரோ தேவையில்லாமல் இப்படி கிளப்பி விட்டிருக்கிறார்கள் என மீடியாவில் தனது கோபத்தை கொட்டினார்.
மேலும், நடிப்புதான் எனக்கு முக்கியம். அதில் தீவிர கவனம் செலுத்த உள்ளேன் என்றும் கூறினார்.
ராம்பாலை ஒப்பந்தம் செய்ய விரும்புகிறவர்கள் இனி தயங்காமல் கால்ஷீட் கேட்கலாம்!