அக் ஷய்குமார், சைஃப் அலிகான் மீண்டுமொரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்கள் சேர்ந்து நடித்த தஷன், பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. மீசையில்லாததால், மண்ணை தட்டிவிட்டு அடுத்த வேலையில் பிஸியானார்கள் இருவரும்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இயக்குனர் ஷோயிப் மன்சூர் இந்திப் படம் ஒன்றை இயக்குகிறார். பெர்செப்ட் பிக்சர் கம்பெனி தயாரிக்கும் இப்படத்தில் நடிக்க அக் ஷய் மற்றும் சைஃப்பிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.
தஷன் மண்ணை அப்போதே தட்டிவிட்ட இருவரும், மன்சூரின் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தனர்.
ராசியான ஜோடி என்பது நடிகர்களுக்குள் இல்லை போலும்.