இணையதளத்தில் எழுதுவது பாலிவுட்டின் லேட்டஸ்ட் பேஷன். எழுதுவதற்கென்றே சில விஷயங்களை செய்கிறார்களோ என்று கூட தோன்றும்.
இந்த மாதம் ஆறாம் தேதி முதல் சல்மான்கான் தொகுத்து வழங்கும் கேம் ஷோ Dus Ka Dum ஒளிபரப்பாகி வருகிறது. இதையொட்டி தனது இணையதளத்தில் பின்வருமாறு எழுதினார் சல்மான்கான்.
நான் அதிகமாக ரிகர்சல் பார்ப்பது கிடையாது. எனக்கு அது பிடிக்காது. நடிகன் தான் சந்திக்கும் மனிதர்ளை கவனித்து, கேரக்டருக்கு ஏற்ப ரியாக்ட் பண்ண வேண்டும்!
ஷாருக்கான் குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து அளித்தபோது, தனது வீட்டில் அதேபோல் அரங்கு அமைத்து ரிகர்சல் பார்த்துக் கொண்டதாக இப்படி எழுதியிருக்கிறார் சல்மான் என்கிறார்கள் ஷாருக்கான் ரசிகர்கள். இடிப்பது என்றால் அதனை நேரடியாகவே செய்வார் என திருப்பியடிக்கிறார்கள் சல்மான் ஆதரவாளர்கள்.
மொத்தத்தில் ரிகர்சலுக்கான ரியாக் ஷன்.