ஜான் ஆபிரஹாமின் இருபத்தியொராம் நூற்றாண்டு தோற்றத்தை பார்க்கும் யாருக்கும், அவருக்குள் வனவிலங்குகளை நேசிக்கும் ஒரு காட்டுவாசி இருப்பது தெரிந்திருக்காது. கெளரவுத்துக்காக காக்கா, குருவிகள் பற்றி பேசும் நீலச்சிலுவை ஆளல்ல ஜான். நிஜமாகவே காட்டுயிர் ஆர்வலர்.
சுற்றுச்சூழல் ஆர்வலரும் வன உயிர்கள் குறித்து படங்கள் எடுப்பவருமான மைக் பாண்டே ஜானின் நண்பர். இருவரும் இணைந்து புலிகள் குறித்து ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.
கால்ஷீட் வாங்கியெல்லாம் புலிகளை நடிக்க வைக்க முடியாது என்பதால், படத்தின் புரொடக் ஷனுக்கு ஆகும் காலம் ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுக்கள் வரை ஆகலாம் என்று உத்தேசமாக கணித்துள்ளனர். இந்த படத்துக்காக ஜான் ஆபிரஹாம் என்டர்டெய்ன்மெண்ட் என்று தனது பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் ஜான்.
புலிவாலை பிடித்திருக்கிறார்... ஜெயம் கிடைக்க வாழ்த்துவோம்!