தமிழ், இந்தி என மொழிக்கு ஒரு படம் பண்ணுகிறார் கே.எஸ்.அதியமான். தமிழில் படம் இயக்கிவிட்டு அதை இந்தியில் ரீமேக் செய்வது இவரது ஒர்க்கிங் ஸ்டைல்.
அதன்படி தூண்டிலின் இந்தி ரீமேக்கைத்தான் அதியமான் இயக்கியிருக்க வேண்டும். ஆனால், அதற்குள் ஃப்ரெஷ்ஷாக ஒரு படம் இந்தியில்.
கிரிமினல் லாயர் ஒருவரைப் பற்றிய கதை. நீதியும் நீதிமன்றமும் குற்றமும் பின்னிப்பிணைந்த ஸ்கிரிப்ட். கே.எஸ்.அதியமான் இயக்க அதிகாரி பிரதர்ஸ் கம்பெனி தயாரிக்கிறது. படத்தின் பெயர் ஜட்ஜ்மெண்ட்.
கிரிமினல் லாயராக சன்னி தியோல் நடிக்கிறார். இரண்டு ஹீரோயின்களும் தயார். அதியமான் காத்திருப்பது ஏ.ஆர்.ரஹ்மானுக்காக. இதுவரை ரஹ்மான் இசையில் அதியமான் படம் இயக்கியது இல்லை. இந்தமுறை எப்படியும் இசைப்புயலை சம்மதிக்க வைப்பது என ரஹ்மானின் தலையசைப்பிற்காகக் காத்திருக்கிறார்.
ரஹ்மானின் ஜட்ஜ்மெண்ட் எப்படி இருக்கப் போகிறதோ!