இது கவலையா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். தாயின் பெயர் ஷர்மிளா தாகூர். மகளின் பெயர் இப்போது தெரிந்திருக்கும், சோஹா அலிகான்.
ஷர்மிளாவின் மகன் சைஃப் அலிகான் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கரீனா கபூருடன் ஊர் சுற்றுகிறார். இதுபற்றிக் கேட்டதற்கு ஷர்மிளா கூறிய பதில், என்னுடைய கவலை சைஃப் அல்ல, மகள் சோஹா!
மகளைக் குறித்து அப்படியென்ன கவலை?
சோஹா அலிகான் ரங் தே பசந்தியில் நடித்தபோது சித்தார்த்துடன் சினேகிதம். இருவரும் காதலிப்பதாக, விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகப் பேச்சு. சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதுதான் ஷர்மிளாவின் கவலை.
அவரது கவலையை நியாயப்படுத்துவது போல சில நாட்களுக்கு முன்பு பொது இடங்களில் இருவரும் இணைந்து காணப்பட்டனர். ஆனால் ஒரு சந்தேகம். மகனுக்கு ஒரு நீதி, சித்தார்த்துக்கு ஒரு நீதி என்று ஷர்மிளா பேசுவது சரியா?