Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடுங்க வைத்த சல்மான் கான்!

Advertiesment
நடுங்க வைத்த சல்மான் கான்!
, வியாழன், 17 ஏப்ரல் 2008 (18:47 IST)
நடிகர்கள் எப்படி சம்பளத்தை உயர்த்துகிறார்கள் என்பது அவர்கள் வயதைப் போல புரிபடாத ரகசியம். சில வேளை ரகசியம் அம்பலம் ஏறும்.

சல்மான் கானை பாருங்கள். சம்பளத்தை முப்பது கோடியாக உயர்த்தியிருக்கிறார். இவரைவிட ஸ்டார் வேல்யூ குறைவான அக்சய் குமாருக்கு 35 கோடிகள். பொறுக்குமா கானின் மனம்?

வசமாக வந்து மாட்டியது ஸ்டுடியோ 18 நிறுவனம். கானிடம் கதை சொல்லி கால்ஷீட் கேட்டது. கதையை பொறுமையுடன் கேட்டவர், இந்தக் கதைக்கு என்னைவிட அக்சய் குமார்தான் பொருத்தமாக இருப்பார். ஏன் நீங்கள் அவரை ட்ரை பண்ணக் கூடாது என்றிருக்கிறார். கான் விரித்த மாய வலை அவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

அக்சயைவிட நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும். வியாபாரமும் அதிகமாக ஆகும் என்றிருக்கிறார்கள். சுறா சிக்கியதும் கான் சுண்டி இழுத்தார் வலையை. அப்படின்னா அக்சய்குமார் நாற்பது கோடி வாங்குகிறார். எனக்கு ஐம்பது கோடி கொடுத்திடுங்க என்றிருக்கிறார் சல்மான். நடுங்கிப் போயிருக்கிறார்கள் கால்ஷீட் கேட்டவர்கள்.

சல்மான் வெறும் முரடர் என்று யார் சொன்னது!

Share this Story:

Follow Webdunia tamil