Publish Date: Tue, 15 Apr 2008 (17:06 IST)
Updated Date: Tue, 15 Apr 2008 (16:44 IST)
பிபாஸா பாசுவின் காதலர் என்பதை தாண்டி ஜான் ஆபிரகாம் ஏதாவது சாதித்திருக்கிறாரா? ம்ஹும்... எதுவுமில்லை. ஜிஸம் தவிர்த்து இவரது சினிமா கேரியரில் ஒரு ஹிட் கூட இல்லை. சரி, நடிப்பு? அதை நாம் சொல்லக் கூடாது.
தீபா மேத்தாவின் வாட்டர் படத்தில் ஜான் நடித்திருந்தார். டொரன்டோவில் வாட்டர் படத்தைப் பார்த்த ஈழ எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ஜானின் நடிப்புப் பற்றி இப்படி எழுதினார்.
தடியை முழுங்கியவர் போல் படம் முழுக்க வந்து போகிறார். படம் முடியும் வரைக்கும் தடியையோ, நடிப்பையோ அவர் வெளியே எடுக்க வில்லை.
ஆனால் ஜான் கோடிகளை முழுங்குவதில் கெட்டிக்காரர். நேற்று வரை ஒரு படத்துக்கு இவரது ரேட் இரண்டு கோடி. ஸ்ரீ அஷ்ட விநாயகா கம்பெனி புதுப்படம் ஒன்றுக்கு ஜானிடம் கால்ஷீட் கேட்டது. நம்பினால் நம்புங்கள்... ஒரு ஹிட் கூட கொடுத்திராத ஜான் ஆபிரகாம் கேட்டது 12 கோடிகள்! இதைவிட நம்ப முடியாத விஷயம் ஜான் கேட்டதை கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறது ஸ்ரீ அஷ்டவிநாயகா நிறுவனம்.
அடக்கடவுளே என்று சொல்லத் தோன்றுகிறதா!