சலவைக்குப் போட்ட சந்திரன் போல பளபளவென்றிருக்கிறார் பார்வதி ஓமனகுட்டன். பெயருக்கு அரை நூற்றாண்டு பழக்கமிருந்தாலும் ஆள் டீன்ஏஜ்ஜை தாண்டவில்லை.
மிஸ் இண்டியா 2008 பட்டம் வென்று பிறை நெற்றியில் கிரீடம் வைத்து சில நாள்களே ஆகிறது. அதற்குள் சினிமாவுக்கு குறி வைக்க ஆரம்பித்து விட்டார்.
அழகி பட்டம் வென்றவர்கள் அடுத்து காலடி எடுத்து வைக்கும் இடமாக இந்தி சினிமா மாறிவிட்டது. போட்டியில் கலந்து கொள்ளும் போதே பார்வதிக்கு செலுலாயிடு கனவு இருந்திருக்கும் போல.
இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தால் ஒத்துக் கொள்வேன் என்று ஓபனாகவே கூறியிருக்கிறார். மாடலிங்கிலும் சினிமாவிலும் பார்வதிக்கு ரோல் மாடல் ஐஸ்வர்யா ராய் தானாம்.
நடிப்பு ஆசையுடன் அக்டோபர் மாதம் நடக்கயிருக்கும் உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளவும் தயாராகி வருகிறார்.
உலக அழகி பட்டம் கிடைத்தால், சம்பளத்தில் இரண்டு மூன்று கோடி அதிகம் கேட்கலாம். எப்படியானாலும் பார்வதி காட்டில் கரன்ஸி மழை உறுதி!