கலையின் தாகம் அவ்வளவு எளிதில் அடங்காது. கத்ரினா கைப்புக்கும் அப்படியே! இவர் நடித்தப் படங்கள் வரிசையாக வெற்றி பெற்றும் ஒரே புலம்பல்.
இந்த வேடத்திற்காகதான் காத்திருந்தேன் என்று சொல்லும்படி ஒரு கேரக்டர்கூட என்னுடைய கேரியரில் அமையவில்லை என சலித்துக் கொள்கிறார் கத்ரினா. நமஸ்தே லண்டன் படத்தின் கேரக்டருமா என்று கேட்டால், அதற்கும் இந்த சலிப்பான பதில்தான் வருகிறது.
அப்படியானால் கத்ரினாவுக்கு எந்த மாதிரி வேடம் வேண்டுமாம்? 'குரு'வில் ஜஸ்வர்யாராய் நடித்த வேடம் அவரை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அதேபோன்று ஜப் வி மெட் கரீனா கபூரின் வேடமும் ஓ.கே.வாம்.
கத்ரினா கைப்பிடம் கதை சொல்லும் இயக்குனர்கள் இதனை நினைவில் வைத்துக் கொண்டால் கால்ஷீட்டும் எளிதாக கிடைக்கும். அதிஷ்டமிருந்தால் சம்பளத்தில் தள்ளுபடியும் கிடைக்கக் கூடும்.