காதலனுடன் கைகோர்த்து மொகாலி கிரிக்கெட் அணியை வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியை பிரபலப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார். இந்த கன்னக்குழி அழகி நடிப்பை மறந்து நாளாகிறது.
இனி ப்ரீத்தி நடிப்பாரா?
ப்ரீத்தியின் ரசிகர்கள் முன்பிருக்கும் மிகப்பெரிய கேள்வி இது. உண்மையை சொல்வதென்றால் நடிக்க ப்ரீத்திக்கு நேரமில்லை. கிரிக்கெட்டில் போட்ட கோடிகளை திரும்ப எடுப்பதில்தான் அவரது குறி.
இதற்கு நடுவில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வேலை ஒன்றையும் செய்துள்ளார். சல்மான் கான், கரீனா கபூர் நடிக்கும் Main Aur Mrs Khana படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்துள்ளார் ப்ரீத்தி. இவர் 'பீக்'கில் இருந்த நேரம் இவருக்கும் கரீனாவுக்கும் ஆகாது. இப்போது அவரது படத்தில் ஐட்டம் நம்பருக்கு ஆடுவது பாலிவுட்டின் புருவத்தை உயர்த்தியுள்ளது.
தனது இந்த தடாலடி முடிவால் அதிரடி நடிகை என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளார் ப்ரீத்தி!