இந்திய சினிமாவின் பெருமைக்குரிய மனிதர்களில் ஒருவர் மீரா நாயர். அவரது சலாம் பாம்பேயும், மான்சூன் வெட்டிங்கும் மறக்க முடியாதவை.
ஆண்களே தொட அச்சப்படும் காமசூத்ராவை துணிச்சலுடன் ஆபாசம் துளி இல்லாமல் எடுத்தவர். அவரது கலைத்துறை சேவைக்கு உரிய மரியாதையை வழங்கியிருக்கிறது இந்தியா அப்ராட் பத்திரிகை.
நியூயார்க்கிலிருந்து வெளிவரும் இந்திய நாளிதழான இந்தியா அப்ராட், ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதர் ஒருவரை தேர்ந்தெடுத்து கவுரவிக்கிறது.
இந்த வருடம் அவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீராநாயர். பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி சிறந்த மனிதர் விருதை மீரா நாயருக்கு வழங்கினார். சென்ற வருடம் இந்த விருதைப் பெற்றவர் இந்திரா நூயி என்பது குறிப்பிடத்தக்கது.