ஜோதா அக்பரின் வெற்றி சரித்திரம் படங்கள் மீதான ஆசையை அதிகரித்திருக்கிறது.
ஏற்கனவே அசோகா படத்தில் ஷாருக்கான் அசோகர் வேடமேற்று நடித்தார். படம் ப்ளாப். அதன் பிறகு வெளிவந்த பல சரித்திரப் படங்களும் அசோகாவைப் போலவே பெரும் தோல்வியை சந்தித்தன.
சரித்திரம் என்றாலே 'ஷாக்' அடித்து நின்ற பாலிவுட்டை மீண்டும் சரித்திரத்தை நோக்கி திருப்பியிருக்கிறது ஜோதா அக்பர்.
சிக்கந்தர் இ அசாம் படத்தில் அரசர் வேடம் ஏற்க அக் ஷயகுமாருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அதுபோல் செங்கிஸ்கான் படத்தில் செங்கிஸ்கானாக நடிக்க சல்மான் கானை கேட்டுள்ளனர்.
இந்த இரு முன்னணி நடிகர்களும் சரித்திர வேடமேற்க இதுவரை தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை. ஆனால், விரைவில் சம்மதிப்பார்கள் இரு படங்களின் தயாரிப்பாளர்களும்!