இந்தி கஜினியை முடிக்காமல் அமீர்கானால் வேறு படத்திற்கு ஓட முடியாது. அந்த வகையில் முருகதாஸூக்கு மகிழ்ச்சிதான். வேறொன்றுமில்லை. இந்தி கஜினிக்காக மொட்டையடித்துள்ளார் அமீர்கான்.
கஜினியில் நடிக்க ஆரம்பித்த பிறகு, தாரே ஜமீன் பர் படத்தை இயக்கி நடித்தார் அமீர்கான். இதில் ஆறு மாதங்கள் அவுட். தாரே ஜமீன் பர்ரின் வெற்றியை ருசித்த பிறகு மீண்டும் கஜினிக்குத் திரும்பிருக்கிறார்.
மொட்டைத் தலை கெட்டப்பிற்காக ஜிம்மில் உடம்பை இரும்பாக்கியதுடன், தலையில் பின்புறம் தனது ஆஸ்தான மேக்கப் மேனை வைத்துத் தழும்பு ஒன்றையும் உருவாக்கியிருக்கிறார்.
இவை அனைத்திற்கும் ஐடியா கொடுத்து உடன் உழைத்தவர் அமீர் கானின் மனைவி கிரண். இவரொரு முன்னாள் உதவி இய்க்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.