Publish Date: Wed, 26 Mar 2008 (15:48 IST)
Updated Date: Wed, 26 Mar 2008 (15:47 IST)
இந்திய சினிமாவின் முந்தைய வசூல் சாதனைகள் அனைத்தையும் உடைத்திருக்கிறது அஷூதோஷ் கோவரிகரின் சரித்திரப் படம் ஜோதா அக்பர்.
அக்பருக்கும் ஜோதாவிற்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று ஒரு கூட்டம் ஜோதா அக்பர் திரைப்படம் ஓடிய திரையரங்குகளை அடித்து நொறுக்கியது.
இதையெல்லாம் அஷூதோஷின் படம் அனாயசமாகக் கடந்திருக்கிறது.
முப்பத்தியொரு நாட்களில் ஜோதா அக்பர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட அயல்நாடுகளில் மட்டும் முப்பது கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முப்பத்தியொரு நாட்களில் உள்நாட்டு வசூல் தொண்ணூறு கோடிகள். மொத்தமாக நூற்று இருபது கோடிகள்!
மொத்தம் 25 நாடுகளில் ஆயிரத்து ஐநூறு திரையரங்குகளில் ஜோதா அக்பர் வெளியானது. ஒரு இந்தியத் திரைப்படம் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் வெளியானதும் ஒரு சாதனைதான்.
படம் நூறு நாளை எட்டும்போது மேலும் பல சாதனைகள் நிகழ்த்தப்படலாம்!