இன்னும் இரு மாதங்களில் நந்திதா தாஸின் இன் சச் டைம்ஸ் வெளி வருகிறது. ஃபயர் நாயகி இயக்கியிருக்கும் முதல் படம் இது.
மக்கள் எனது கண்கள் வழி படத்தைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நெடுநாள் விருப்பம். ஒரு நடிகையாக மட்டும் இருக்கும் வரை அது சாத்தியப்படாது. நான் இயக்குனராவதற்கு இதுவே காரணம் என்றார் நந்திதா.
குடும்ப உறவுகள், அதன் சிக்கல்கள் குறித்து நந்திதாவின் முதல் படம் பேசுகிறது. நசுருதீன் ஷா, பரேஷ் ராவல், தீப்தி நாவர், சஞ்சய் சூரி போன்ற பிரபலங்களுடன் நிறைய தியேட்டர் ஆர்ட்டிஸ்டுகளையும் தனது படத்தில் நடிக்க வைத்துள்ளார் நந்திதா.
இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் கேமராமேன், ரவி.கே. சந்திரன். இவர்தான் நந்திதா படத்திற்கு ஒளிப்பதிவு. பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்பவர் எப்படி மினிமம் பட்ஜெட் படத்தில்?
இந்தக் கேள்விக்கு ரவி.கே. சந்திரனின் பதில், நந்திதா போன்ற ஒரு ஆர்ட்டிஸ்டுக்காக எதுவும் செய்யலாம்!