பார்க்கிறவர்களிடம் எல்லாம் அனுபம் கெர்ரின் புகழ் பாடுகிறார் ஸ்ரேயா. ஹாலிவுட் படம், அதர் என்ட் ஆஃப் தி லைனில் ஸ்ரேயாவின் அப்பாவாக நடிக்கும் அனுபம் கெர், நடிப்பின் சூட்சுமங்களை ஸ்ரேயாவுக்குச் சொல்லித் தந்தாராம். அதுதான் இந்த பாராட்டுப் பத்திரம்.
இவர் நடிக்கும் ஏக்-தி பவர் ஆஃப் தி ஒன் படத்தில் நானா படேகர் நடிக்கிறார். அவர் கேரக்டரை எப்படி உள்வாங்கி வெளிப்படுத்துகிறார் என்பதை பார்ப்பதே பரவசம் என சிலிர்க்கிறார் ஸ்ரேயா. இதில் பாபி தியோலும் உண்டு.
இந்த இரு படங்கள் தவிர தீபா மேத்தாவின் வாட்ஸ் குக்கிங் மற்றும் மிஷன் இஸ்தான் புல் படங்களில் நடிப்பதால் தென்னிந்தியப் படங்களை அவ்வளவாக திரும்பிப் பார்ப்பதில்லை ஸ்ரேயா.
பாலிவுட்டில் நிலையான ஒரு இடத்தைப் பிடிப்பதே தனது லட்சியம் என நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார்.