Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லண்டனில் முதல் பாலிவுட் நடிப்புப் பள்ளி!

Advertiesment
லண்டனில் முதல் பாலிவுட் நடிப்புப் பள்ளி!
, வியாழன், 6 மார்ச் 2008 (17:21 IST)
லண்டனில் முதல் பாலிவுட் நடிப்பு‌பள்ளி செப்டம்பர் மாதத்தில் துவங்குகிறது. இதில் இ‌ந்‌தி நடிக‌ர் அநுபம் கர், நடிகைக‌ள் ஊர்மிளா மடோண்ட்கர், தபு, பொமன் இரானி ஆகியோர் பாடம் நடத்தவுள்ளனர்.

வடக்கு லண்டனில் இஏலிங் ஆப் மீடியாவை அடிப்படையாகக் கொண்டு அமைய உள்ள இந்த பள்ளியில் பிரிட்டன், ஆசிய மாணவர்கள் அதிகளவில் சேர்க்கை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏக்டர் பிரிபேர்ஸ், ஹீத்ரோ சிட்டி, இஏலிங் ஹம்மர்ஸ்மித் ஆகியவற்றுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த புதிய நடிப்பு பள்ளி அமைய உள்ளது.

மும்பையில் 2005 ஆம் ஆண்டில் 'ஏக்டர் பிரிபேர்ஸ்' பயிற்சி மையத்தை கர் துவக்கினார். லண்டனில் அமைய உள்ள புதிய பாலிவுட் பள்ளியை நிர்வகித்து நடத்தப்போவதும் இவரே. இந்த பள்ளியில் ஆண்டுக்கு 60 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். மூன்று மாத படிப்புக்கு 6 ஆயிரம் பவுண்டு (ரூ.4,50,000/-) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்திய-பிரிட்டன் படங்களுக்கு இடையேயான கதை, நடிப்பு, படத்தொகுப்பு பணிகள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடிப்பு பள்ளிகள் அதிகரித்து வருகின்றன.

"பெரும்பாலான இந்திய திரைப்படங்கள் பிரிட்டனில் எடுக்கப்படுகிறது. ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பபெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மருத்துவராகவும், பொறியாளாராகவும் ஆக வேண்டுமென்று விரும்பினர். ஆனால், தற்போது நடிகராக்கவும் விரும்புகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அதிக பணம் சம்பாதிப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம்" என்று எரோஸ் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் கிஷோர் லுல்லா கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil