அமீர் கானுடன் நடிக்கும் 'கஜிரி' (Kajiri) முடிந்த பிறகே வேறு இந்திப் படங்களில் நடிப்பது என அசின் முடிவு செய்திருக்கிறார் போல. வருகிற வாய்ப்புகளை எல்லாம் அவர் தட்டிக் கழிப்பதைப் பார்க்கும் போது அப்படியே தோன்றுகிறது.
'கஜிரி' வெளிவரும் முன்பே மூன்று பட வாய்ப்புகள் அசினை தேடி வந்துள்ளன. அதில் முக்கியமானது ஹரி இரானியின் படம்.
அமிதாப் இதில் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். படத்தில் அமிதாப்பிற்கு மகள் ஒருவர் இருக்கிறார். இந்த மகள் வேடத்தில் நடிக்க அசினிடம் இரானி பேசியுள்ளார்.
பெரிய வாய்ப்பு தேடி வந்தாலும் பதில் சொல்லாமல் பொறுமை காக்கிறார் அசின். அமீர் கானுடன் நடிக்கும் படம் வெளி வரட்டும், பிறகு பார்க்கலாம் மற்றப் பட வாய்ப்புகளை என்பதே இந்த பொறுமையின் அடையாளம்.
இரானி படம் தவிர ஷாஹித் கபூர் மற்றும் சல்மான் கான் ஜோடியாக நடிக்க தலா ஒரு படம் அசினை தேடி வந்தும் சம்மதம் என தலையசைக்காமல் இருக்கிறார். தலைக்கனம்தான் காரணமோ?