Publish Date: Mon, 24 Mar 2014 (12:22 IST)
Updated Date: Mon, 24 Mar 2014 (12:21 IST)
நாம நடிச்சு, நமக்குப் பிடித்த மாதிரி படமெடுத்தால் மெயில் பாக்ஸ் பாராட்டில் நிறையுமே தவிர பர்ஸ் ரொம்பாது என்பதை ஆடு ஓநாய் ஆட்டத்தில் பலத்த நஷ்டத்தில் உணர்ந்து கொண்டார் இயக்குனர். அதனால் அடுத்தப் படத்தில் இரு சபதங்கள் எடுத்துள்ளார். நாம நடிக்கக் கூடாது, முன்னணி நடிகர் ஒருவர்தான் ஹீரோ. கண்டிப்பாக சொந்த தயாரிப்பு கூடாது.
ஸ்கிரிப்ட் முடித்து இந்த இரு நிபந்தனைகளுக்கும் தலையாட்டிய தயாரிப்பாளரையும் இயக்குனர் பிடித்துவிட்டார். முன்னணி நடிகர்... அதுதான் பிரச்சனை. ஏற்கனவே முதல்சுற்று பேச்சுவார்த்தையுடன் கிளம்பிப் போன மன்மத நடிகரையே மீண்டும் அழைத்துப் பேசியுள்ளார். அனேகமாக இந்த காம்பினேஷன்தான் வொர்க் அவுட் ஆகும் என்கிறார்கள்.
இயக்குனர் மேதாவி என்றால் நடிகர் அதிமேதாவி. இப்பவே கண்ணை கட்டுதே.