Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருங்கால சூப்பர்ஸ்டாரின் நிகழ்கால பந்தா

Advertiesment
வருங்கால சூப்பர்ஸ்டாரின் நிகழ்கால பந்தா
, செவ்வாய், 18 மார்ச் 2014 (10:55 IST)
எதிர்நீச்சல் போடமலே உயரத்துக்கு வந்த நடிகரின் புதிய படத்தின் ஆடியோ விழா இரண்டு தினங்கள் முன்பு நடந்தது. பணம் தந்து அல்லக்கைகளை இறக்கியவர் நொடிக்கொருமுறை வருங்கால சூப்பர்ஸ்டார் என்று அவர்கள் கோஷமிடும்படி பார்த்துக் கொண்டார்.

சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடிகரை அணுகியது. தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தில் வருங்கால சூப்பர்ஸ்டாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்பது அவர்களின் எண்ணம்.

என்னுடைய பி.ஏ.வை பாருங்க, மன்ற தலைவரை பாருங்க என்று தட்டிக் கழித்தவர் கடைசிவரை சம்பந்தப்பட்டவர்களை சந்திக்கவே இல்லை. அவரின் அல்லக்கைகள் அண்ணன் இப்போ பிஸி என்று கடுப்பேற்றியிருக்கிறார்கள்.

விழிப்புணர்வு குறும்படத்தில் பூமிநாயகன் விரும்பி நடித்துத் தந்திருப்பது கவனிக்கத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil